ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உள்ளது

பெற்றோர்கள் மனது வைத்தால் ஏவுகணைகளின் தலைவன் சொன்னது நடக்கும்!

ஓர் உரத்த குரல் எனக்கு மகன் பிறந்து விட்டான், இஞ்சினியர் பிறந்துவிட்டான் என்று அந்த குழந்தையின் அப்பா சந்தோஷப்படுகிறார். பாவம் பிறந்த அந்த குழந்தைக்கு அது தெரியாது.

அப்பாவின் ஆசை, தன் மகன் இஞ்சினியர் ஆக வேண்டும் என்பது. அப்போது தான் அடுத்த தெருவில் இருக்கும் இஞ்சினியர் ரமேஷ் போல் கைநிறைய சம்பாதிக்க முடியும். குழந்தை வளர்ந்து பள்ளிக்கு செல்கிறான் ஒரு வழியாக பையன் பத்தாம் வகுப்பு படிக்க தொடங்கி விட்டான். கணக்குக்கு ஒரு டியூஷன், இங்கிலிஷ்க்கு ஒரு டியூஷன், அறிவியலுக்கு ஒரு டியூஷன் என்று அந்த குழந்தையின் தலையில் அப்பாவின் ஆசை தினிக்கப்படுகிறது.

ஆனால், பையனின் நினைப்போ கிரிக்கெட் விளையாடுவது, அவனும் அப்பாவுக்கு தெரியாமல் கிரிக்கெட் ஆட தன் சக மாணவர்களோடு விளையாட்டு திடலுக்கு சென்று கிரிக்கெட் ஆடுகிறான், மிகவும் சிறப்பாக ஆடுகிறான், தூரத்தில் இருந்து அவனது அப்பா கிரிக்கெட் ஆடுவதை பார்த்துவிட்டார். அவ்வளவுதான் பிறகு கையில் கம்புடன் அவனை நோக்கிச் சென்றார். அவனை பார்த்து இது தான் நாளைக்கு உனக்கு சோறு போடுமா? உன்ன படிக்க தானே சொன்னேன். இங்க என்ன விளையாட்டு? இப்படியே விளையாடிக் கொண்டியிருந்தால் என்னைப் போல் கூலித் தொழில் தான் செய்ய வேண்டும் என்று அவனை திட்டி அடித்து வீட்டிற்கு அழைத்துச்சென்றார்.

அழுதுகொண்டே வீட்டுக்கு சென்று படிக்க புத்தகத்தை புரட்டுகிறான். படிப்பு ஏறவில்லை கிரிக்கெட் தான் ஞாபகத்துக்கு வருகிறது.

இப்படி டெண்டுல்கரின் பெற்றோர் நினைத்து இருந்தால் நம் இந்தியாவிற்கு டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்கள் கிடைத்திருப்பார்களா?

ஒருவழியாக பையன் பனிரெண்டாம் வகுப்பை முடித்துவிட்டான். பிறகு கல்லூரி வாழ்க்கை, சிறு வயதில் அவன் ஆசைப்பட்ட கிரிக்கெட் தான் ஆட முடியவில்லை, சரி என்று அவனும் மனதை தேற்றிக் கொண்டு இயற்பியல் படித்து விட்டு ஒரு விஞ்ஞானியாகலாம் என்று ஆசைப்பட்டான். அதற்கும் அவனது அப்பா முட்டுக்கட்டைப் போட்டார். நீ இஞ்சினியர் தான் ஆக வேண்டும் என்றார். இஞ்சினியர் ஆனால்தான் கைநிறைய சம்பாதிக்க முடியும். அதனால் தான் இஞ்ஜினியர் படியென்று சொல்கிறேன் என்று தன்னுடைய ஆசையை தன் மகன் மூலமாக நிறைவேற்ற பார்கிறார்.

இப்படி அப்துல்கலாம் பெற்றோர் நினைத்திருந்தால் இப்படிப்பட்ட மாமேதை ஏவுகணை தலைவன் அப்துல்கலாம் நமக்கு கிடைத்து இருப்பாரா?

பில்கேட்ஸின் பெற்றோர் இப்படி நினைத்திருந்தால் சாப்ட்வேரில் இப்படி ஒரு முன்னேற்றம் அடைந்திருக்காமா?

விவேகானந்தர் சொன்ன வாசகம் அற்பமாக இருக்கும். '10 இளைஞர்களை கொடுங்கள் நான் சிற்பமாக்கி காட்டுகிறேன்' என்று சொன்ன வார்த்தை நடக்குமா?

இப்படிப்பட்ட பெற்றோர்கள் இருக்கும் வரை எப்படி சாத்தியமாகும்?

மாமேதை அப்துல்கலாம் 2020ல் இந்தியா வல்லரசு ஆவது இளைஞர்கள் கையில் உள்ளது என்றார், அப்துல்கலாம் சொன்னது நடக்குமா?

மகன் தோலுக்குமேல் வளர்ந்தால் தோழன் என்று சொல்லும் பெற்றோர்கள் அவ்வாறு நடந்து கொள்கிறார்களா?

இசை ஞானியை கூப்பிட்டு கிரிக்கெட் ஆட வைக்க முடியுமா??
சூப்பர் ஸ்டாரை சைன்டிஸ்ட் ஆக்க முடியுமா??

இங்கே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமைகள் உள்ளன. அதை வெளிக்கொண்டு வரும் எண்ணம் தான் பெற்றோர்கள் இடத்தில் இல்லை.

பெற்றோர்கள் தங்கள் ஆசையை தன் பிள்ளைகள் மீது தினிக்காமால், தன் பிள்ளைகளின் ஆசையை கேட்டு அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வழியை சொல்லிக் கொடுங்கள். அப்போது தான் இளைஞர்களின் நாயகன் அப்துல்கலாம் சொன்ன அந்த திருவார்த்தை 2020ல் சாத்தியம் ஆகும்.

எழுதியவர் : செல்வமணி - படித்தது பகிர்ந (20-Sep-15, 9:05 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 1530

மேலே