ஈழத்து துரோபதைகள்

பொல்லாங்கு செய்தோரை
புகழ்ந்து புறம் பாடும்
புலவனும் உண்டோ இம் பூவுலகில்
பல்லாக்கில் உல்லாசம் போகவோ
பதவி பெற்றனரோ
மனிதன் பாவத்தின் விளிம்பிலடா
வந்தவன் கால்களில்
மண்டாடிக்கேட்டோரை
மண்டையில் சுட்டு
ஆடைகள் அகற்றி
ஆரவாரம் செய்தாரடா
எம் மண்ணில்
பெற்றவர் முன்னிலையில்
தன் பிள்ளை துயிலுரித்து தொட்டு
மகிழ்ந்து கைகொட்டி சிரித்தவர்கள்
சிரமின்றி போவார் மண்ணுனுள்