இராசனையற்ற இதயம்

குண்டு துளைத்தச்சென்ற வலியாக
வண்டு துளைக்கும் கணம் வரை வலி தங்கிய கர்ணன் போன்றும்
காதல் ஞாபகங்கள் தாங்கிய காலம் உருண்டோடுகின்றது
மிண்டும் அந்த வருகையை மீள்பதிகின்றது
வஞ்சனையற்ற இதயம்

வாடி விழுந்து சருகுகள்
தேடி வந்து பாதம் தடவி நினைவை திசைமாற்ற நினைக்கின்றது
இனிமை விட்டு தனிமையை நாட்டம் காண அழைக்கின்றது
வீட்டுத்தோட்டம் வெறிச்சோடிக்கிடைக்கையில்
குடைபிடித்த மரநிழலில்
நடைப்பிணமாய் நானிருக்கின்றேன்
விட்டுச்சென்ற நினைவுகளை மீட்டபடி

கூவும் குயிலை விரட்டும் இரசனையற்ற மனம்
தாவும் பார்வைகளில் அவள் வந்துபோவதாய் தெரிகின்றது
சித்திரைப்புளுக்கம் நித்திரையை திருடுகின்றது
தின்னைப்படிக்கட்டில் அவள் நினைவு வருகின்றது
நடுச்சாமத்தில் எனையாறியாததூக்கம்
நடுமதியம் கண்விழிகின்றது
நாட்களோ விரயமாய் கழிகின்றது
விரக்தியில் எரிகின்றது இதயம்
வீனாய்ப்போகின்றது வாழ்க்கை

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (22-Sep-15, 6:39 pm)
பார்வை : 70

மேலே