அவள், பறந்து போனாளே

வல்லினமாய் இருந்தவனை
மெல்லினமாய் மாற்றியவளே !
தனி ஒருவனாய் இருந்தவனின்
தடம் மாற்றி விட்டவளே !

பாலாய் கொதித்து அடங்கும் காளை
என்னை பொங்கவிடாது கட்டிப்போட்டவளே !
கூலாய் வந்து தினம் என்னை குளிர்வித்துவிட்டு
காணாது சென்றவளே, திடீரென்று காட்சி மறுத்தவளே !

காதலுக்கு ஒரே காரணம் மட்டும் தான்
என்னை உனக்கும், உன்னை எனக்கும் பிடிக்கும்,
ஆனால் காதல் தோல்விக்கு எத்தனை காரணம்?
அத்தனையும் தீர்க்கமுடியாத தீர்க்கதரிசனமாய்
என் கண்ணீர் பிம்பம் முன்,
நம் காதல்
இன்று கானல் நீராய் கொதிக்குதுதடி.

நான் மீள, வீழாது வாழ, காதலை ருசிக்க அனுமதி,
இன்னும் சில காலம் வாழத்துடிக்கிறேனடி,

இன்று வரை உன்னை தேடித்தேடி தொடர்ந்து
ஓடி ஆடி இதுவரை ஓட்டமும் வாட்டமுமே,
எங்கே நம் காதலை நான் இதுநாள் வரை
நினைத்தேன், ரசித்தேன், இல்லையே,

இனிமேல் தான் நான் அசை போட்டு
அசை போட்டு ஆசை ஆசையாய்
நம் காதல் நாட்களை பின்சென்று ரசிக்க வேண்டுமடி,
அதுவரை, வாழு வாழ விடு,
அன்பே, காதலே!

பி.கு:

அவளது
இரண்டெழுத்துப்பெயரின்
முதலெழுத்தையும்
கடைசி எழுத்தையும்
மறப்பதற்கான வழியை மட்டும்
நீங்கள் சொல்லுங்கள்...
மீதமுள்ளவற்றை
நான் பார்த்துக்கொள்கிறேன்...

எழுதியவர் : செல்வமணி (23-Sep-15, 12:21 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 53

மேலே