தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால்

மைதாவை உண்ணாதீர்கள்... !!
-----------------------------------------------------------------------------------------
தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது பரோட்டாகடை, அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா, கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே.

பரோட்டாவின் கதை என்ன தெரியுமா.....??

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. வட மாநிலங்களில் ரொம்பவும் அரிது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின. பரோட்டாவும் பிரபலமடைந்தது.

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்.....?

மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில்போடுவார்கள்.

இப்போது பரோட்டாவின் மூல பொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது. பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கப்படுகிறது, நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக்க பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பென்சாயில் பெராக்சைடு (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள். அதுவே மைதா. Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம் இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு நோய்க்கு காரணியாய் அமைகிறது.

இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives, Sugar, Saccarine, Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது. இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது.

இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது, ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது. மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல மைதாவில் நார் சத்து கிடையாது, நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும்.

இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது, எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த பண்டங்களை கட்டாயம் தவிக்க வேண்டும்.

ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன.
மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல், இருதய கோளறு, நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு. நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர். மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர். இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம். நம் தலைமுறையை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேழ்வரகு, கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் "..

எழுதியவர் : செல்வமணி - இணையம் (23-Sep-15, 1:06 am)
பார்வை : 216

மேலே