அவளதிகாரம் துளிகள்

என் மூச்சுக் காற்று தொடும்
தூரத்தில் தான் நீ

♥♥♥♥♥♥
என் நெஞ்சுக் காட்டுக்குள்
எதைத் தேடுகின்றன
உன் விரல்கள் ?

♥♥♥♥♥♥♥♥♥

படபடக்கும் உன் இமைகளை
முத்தத்தால் வருடுகிறேன்...

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

முத்தத்தின் ஈரங்கள்
என் பாா்வை படும்முன்
காய்ந்து விடுகின்றன....

♥♥♥♥♥♥♥♥♥♥♥
நீ எதிா் பாா்க்கும் முத்தம்
இதுவா பாா் ?... இதுவா பாா் ?
ஆம், என்று சொல்லவேயில்லை
இன்னும் நீ ...

♥♥♥♥♥♥♥

போய்விடு... போய்விடு
பெரும் தீனிக்காரன் நான்...!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

எழுதியவர் : புதிய கோடங்கி (23-Sep-15, 9:22 am)
பார்வை : 89

புதிய படைப்புகள்

மேலே