எல்லாம் எனக்கு தெரியும்

தான் சொல்வதே சரி ....
தான் செய்வதே சரி ....
யாரும் தடுக்க முடியாது .....
எல்லாம் எனக்கு தெரியும் ....
இதுவே அறிவின்மையின் ....
உச்சமாகும் ....!!!

அறிவின்மையில் வாழ்பவன் ....
நரகலோகத்துக்கு......
போகத்தேவையில்லை ......
வாழும் காலத்திலேயே ....
நகரத்திலேயே வாழ்கிறான் ...!!!

+
குறள் 835
+
பேதைமை
+
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 55

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (23-Sep-15, 4:13 pm)
பார்வை : 180

மேலே