எனக்கொரு தாலாட்டு

என்னை பத்து மாதங்கள் சுமந்து
சுகமான சுமையாய் இறக்கி - கொடுத்த
முதல் முத்தம் எனக்கொரு தாலாட்டு

எவர் கண்பார்வையும் கண்சிமிட்டாமல்
என்னை தனிமையாய் தனத்தொடு - அனைத்து
பாலூட்டியதும் எனக்கொரு தாலாட்டு

எவரும் போடாத ஆடையாய்
எனக்கு மட்டுமாய் வடிவமைத்து - கொடுத்த
முதல் ஆடையும் எனக்கொரு தாலாட்டு

என்றும் அவள் இமைகளை இறக்காமல்
என்னை இம்மையும் நினைவில் - தாங்கிய
உள்ளத்தை நினைக்கையில் எனக்கொரு தாலாட்டு

என்றைக்கு என்னை மங்கையாய்
மனமாற முகர்ந்தாலோ அன்று சிரித்த
முகத்தை பார்த்தும் எனக்கொரு தாலாட்டு

எந்த நாளோ என்று எதிர்பார்த்த
கண்களுக்கு என்னை வழியனுப்பியதில்
ஓரத்தில் கசிந்த ஈரமும் எனக்கொரு தாலாட்டு

எந்த நிமிடத்தில் நான் தாலாட்டுவேணோ
என்று ஆவலாய் இருந்த முகத்தை
பார்த்ததில் எனக்கொரு தாலாட்டு

நானே தாலாட்டியதும்
என்னை தாலாட்டியவள்
எங்கள் இருவரையும் சேர்த்து
மடியில் தாலாட்டுவதே
எனக்கேவுரிய தாலாட்டு

எழுதியவர் : பிரியா (25-Sep-15, 2:31 pm)
Tanglish : enakoru thaalaattu
பார்வை : 588

மேலே