கவசம் மறந்த தினம்
காலை பரபரப்பில்
சாமி கும்பிட்டு
காலை தினசரியில் மூழ்கி
மனைவியின் நச்சரிப்பை
கண்டும் காணாமல் கழன்று கொண்டு
வண்டி சாவியை எடுத்து
சிணுங்கு கைபேசியை கைப்பற்றி
சட்டை பையில் உள்ளதை சரிபார்த்து
வண்டியில் எரிபொருள் ஓரளவு இருக்கா
என ஆட்டி தெரிந்து கொண்டு
மதிய சாப்பாடு மறவாமல் பையில் வைத்து
இன்றைய வேலைகளை மனதில் ஓட விட்டு
சாலையில் கவனம் சிதறாமல் ஓட்டி
சிவப்பு விளக்கினால் நிறுத்தப்பட்டு
ஆசுவாசப்படுதினால் ஆபத்து வந்தது .......!
என்ன அது ....? ஐயகோ.. என்னவென்று சொல்ல
வந்தாரையா வந்தாரு! வெள்ளுடை வேந்தரு
என்னை பற்றி மிகுந்த அக்கறையுடன்
என் வண்டி சாவியை தன வசமாக்கி
என் தப்பை சொன்னாரு....ஆமாங்க
நான் தலை கவசத்தை மறந்துட்டேங்க ...
காவலரால் ஓரங்கட்டப்பட்டு
கேள்விகளால் துளைக்கப்பட்டு
பிறப்பு சான்றிதழ் ஒன்றை தவிர எல்லாம் சரிபார்க்கப்பட்டு
அவமானமும் காலதாமதமும் பின்னப்பட்டு
என் வண்டி அவர்கள் கையில் அனாதையாக விடப்பட்டு
குற்றபத்திரிக்கையை கையில் வாங்கி
மாலையில் நிஜ சான்றிதழ்கள் நிரூபிக்கப்பட்டு
இரு நாட்களுக்கு பின்நான்கு மணி நேரம் காத்திருந்து
நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு
குற்றவாளியா என விசாரிக்கப்பட்டு
அபராதம் கட்டி உடமைஎல்லாம் பெறப்பட்ட பின்
கிடைத்த மகிழ்ச்சி இருக்கிறதே.......
சின்ன அசட்டு தனத்துக்கு பெற்ற பரிசு... அப்பப்பா .....