மந்திரப் பெயர்

விழிச்சாரல் மண்மேல் பதிந்து
மலைத்தேன் பட்டொளித்து
முளைதேடுத்த நெல்மணி அவள் !

காற்றில் வார்த்தை வடித்து
வடிகால் கொண்டு உரிதெடுக்கப்பட்டு
கோர்த்தெடுத்த அவள் பெயர்!

விருப்பமான வண்ணம் சாரல் தெளித்து
ஊன்று கோல் கொண்டு
உரிமை விதைத்த உன் உருவப் படம்

உன்னைக் கண்டால் சரபம்
கூட கவிதை கக்கும் விஷ மருந்தில் !

பெயரும் பெயர்க் குணமும்
திளைக்க பூமியில் வளர்த்த தேவததைத் தென்றல் !

பிடுங்கப்பட்ட மயில் தோகை மட்டும்
கடும் பாறை குணமா கொள்ளும்
கோபப் பேச்சைப் போல் !

நெடுச்சாலை பயணம் கூட
உன் வாசனை தருகிறது
நீ என்னுள் இருப்பதால் !

தொடர்வானம் ஒன்று முடியா
நடையில் சென்று உன்னைத் தேடுகிறது !

காற்று நளினம் பூண்டு புரியா
வார்த்தைகள் கொண்டு பூத்தெளித்து
உருவாக்கியது உன் பேச்சு !

நான் தேடிப்பிடித்த கவிதைகளும்
நீ விட்டெரிந்த மண் வாசனையும் ஒன்று இதன் பெயர் !

ரத்தம் பாயா இடங்கள்
வியர்க்கா இடங்களுக்கு ஓய்வளித்து
காமம் காணா உணர்வு !

தாய்பாலின் வர்ணம் கூட உன்
இயற்க்கைக்கு முன்னாள் தோற்க்கும்!

நீர்க்கும் பாறைக்கும் மொழியறிந்தா காதல்
தாண்டவம் காண்கிறது !

எழுதியவர் : வேல்முருகானந்தன் .சி (26-Sep-15, 4:45 am)
Tanglish : manthirap peyar
பார்வை : 114

மேலே