ஒரு திருமணம் ஆன ஆண் அவன் பெண் தோழியுடன் நட்பு சரிபட்டு வருமா பெண் தோழியுடன் ஒரு நட்பு

பெண் தோழியுடன் ஒரு நட்பு
பெண் தோழியுடன் ஒரு நட்பு போட்டிக்கு சமர்ப்பித்தல்

பிரியமானத் தோழியே - அலைகளை
பிரியுமா அந்த ஆழியே.

ஆழியுடன் அலையும் இணைந்தால் நட்பே.
ஆணுடன் பெண்ணும் பழகினால் நட்பே.

பாறைமீது அலைகள் அல்லவா தழுவுது.
பாருக்குள் ஆனும்பெண்ணும் ஏன் நழுவுது?

பெண்ணைத் தொட்ட ஆணுக்கு இல்லறம்.
பெண்ணோடு ஆண்பழகினால் நல்ல அறம்.

நல்ல அறம் என்பது நட்பின் இலக்கணம்.
நண்பர்களாய் பழகுவதில் ஏது தலைக்கணம்

தலைக்கணம் இல்லா மனமுடையதே நட்பு - ஆண்
துணையுடன் பெண் பழகினாலும் தூய நட்பே.

நண்பனின் மனைவி உடன்பிறவா சகோதரி - மனதில்
நன்னடத்தைத் துளிரும் நட்பின் முகவரி.

பெண்ணெல்லாம் ஆணுக்கு அடிமை இல்லை - இதை
புரிந்துக் கொண்டு நடந்தால் ஏது தொல்லை.

பெண்ஒருத்திப் பழகினால் வருவதுக் காதலா? - அவளோடு
ஆணொருவன் பழகினால் வருவதும் காதலா?

உள்ளத்திற்குள் ஒளிந்திருக்கும் சபலம் - இருவரும்
உணர்வறிந்துப் பழகும்போது மாறிடும் அதன் அபலம்.

ஆணோடு ஆண் பழகுவதில் மட்டும் இல்லை நட்பு - ஒரு நட்புடன்
ஆணோடு பெண்ணும் பழகுவதில் தெரியும்அதன் ஈர்ப்பு.

நீயும் நானும் சந்தித்தவேளை நன்கு அறிவோம் - நமக்குள்
நியாயமான நட்பு வளர்வதை ஊருக்குள் விதைப்போம்.

எங்களுக்குள் வளர்கின்ற நட்பில் களங்கமில்லை - நட்பால்
எந்நாளும் எங்களுக்குள் பிரிவும் வருவதில்லை.

பிரியமானத் தோழியைக் கரம்பற்ற ஆணொருவன் வந்தாலும்
பிரியாத நட்பின் புனிதத்தை அவனும் அறிந்து போற்றுவான்.

நட்பு
திருத்து | நீக்கு
இந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க
எழுதியவர் : சு. சங்கு சுப்ரமணியன்.
நாள் : 19-Sep-15, 6:40 pm
சேர்த்தது : s.sankusubramanian

எழுதியவர் : (27-Sep-15, 6:00 pm)
சேர்த்தது : s.sankusubramanian
பார்வை : 122

மேலே