பாயாசம்

டம்ளர தூக்கி வாய்க்குமேல வச்சி
பத்து நிமிசத்துக்கு பெறகுதான்
அந்த பாயாசம்
பல்லுல பட்டுச்சி;
என்ன பாயாசம் இது?
சக்கர கரிக்கிது,
அதுவுமில்லாம‌
களிமாதிரி இருக்கேன்னு
அம்மா கூட
சண்ட போட்டு முடிச்சதும்;

பொண்ணு கண்ணுல
பொத்துக்கிட்டு வரும்
கண்ணீரப்போல,
மழையும்
பொத்துக்கிட்டு வந்தது
அந்த வானத்துல;

எங்க வீட்லயோ
கதவுவச்ச வாசற்படியோ
ஒன்னே ஒன்னுதான்,
ஆனா,
கதவில்லாத வாசற்படிகள் பல
அந்தரத்தில இருந்ததால,
வீட்டையும் பதம்பார்த்து விட்டது
ஜவ்வரிசி சைசான அந்த‌
மழைத்துளிகள்.

ஓட்டைகளை சரிசெய்த பெறகு
நாபகம் வந்தது
அந்த களிபாயாசம்.
மீண்டும் டம்பளர தூக்கி
வாய்க்கு மேல வச்சதும்
பத்து நொடிக்கு குறைவுதான்
பால்பாயாசம் மாதிரி
இலகுவா பல்லுல பட்டுச்சி,
அந்த களிபாயாசம்......

ஆஆ! என்ன சுவை!
ஒருவேளை
இந்த சுவை கூட்டத்தான்
அந்த வானம் அழுததோ?????

எழுதியவர் : sugumar surya (29-Sep-15, 5:59 pm)
Tanglish : paayaasam
பார்வை : 97

மேலே