தொண்டை நாட்டினர்
தமிழறிஞர்உ.வே.சு.அவர்கள் ஒரு விழாவில் கலந்துகொண்டார்.அவருக்கு முன் மூன்றுஅறிஞர்கள் சொற்பொழிவு ஆற்றினார்கள் .விழா அமைப்பாளர் மூவரின் பேச்சுத் திறம் பற்றி உ.வே.சு.ஐயர் அவர்களிடம் கருத்து கேட்டார்.அவரும்,''தொண்டை நாட்டினர்,தொண்டை நாட்டினர்,தொண்டை நாட்டினர்,''எனக் கூற அவருக்கு ஒன்றும் விளங்காமல், விளக்கமாகக் கூற வேண்டினார்.ஐயர் சொன்னார்,''முதலில் பேசியவரின் பேச்சில் சாரம்ஏதும் இல்லை வெறும் வரட்டுக் கூச்சல் தான் இருந்தது.அவர் தன தொண்டையை மட்டும் நிலை நாட்டினார்.இரண்டாமவர் பேச வேண்டிய தன கடமையை ஒழுங்காகச் செய்தார்.எனவே அவர் தம் தொண்டை செய்து முடித்தார்.மூன்றாமவர் தொண்டை நாட்டை சேர்ந்தவர்.அவர் தன தொண்டை நாட்டின் பெயரை நிலை நாட்டினார்.எனவே மூவருமே தொண்டை நாட்டினர் தானே?''அமைப்பாளர், ஐயர் அவர்களின் மொழி ஆற்றலை எண்ணி வியந்தார்.