ஒத்துப்போ

இங்கிலாந்தில் ஒரு மாநகர மேயர் தனது நகரத்தில் ஒரு மாபெரும் கூடம்(town hall) கட்ட விரும்பினார்.இப்பணி ஒரு கட்டட நிபுணரிடம் ஒப்படைக்கப்பட்டது.அவரும் ஒரு டிசைன் போட்டு மேயரிடம் காண்பித்தார். அமைப்பு மிக அழகாக இருந்தது.ஆனாலும் மேயருக்கு ஒரு சந்தேகம். அதாவது அவ்வளவு பெரிய கூடத்தில் நடுவே தூண்களே அமைக்கப் படவில்லை.அதனால் கட்டடம் நீண்ட நாள் தாங்காது என்று மேயர் கருதி தூண்களை சேர்க்குமாறு வலியுறுத்தினார்.நிபுணரோ அதற்கான தேவையில்லை என்றும் இது புது மாதிரியான டிசைன் என்றும் கூறினார்.

ஆனால் மேயர் ஒத்துக் கொள்ளத் தயாராயில்லை.எனவே மேயரின் விருப்பப்படி நிபுணர் மூன்று தூண்களைக் கட்டினார்.மேயருக்கு இப்போது பூரண திருப்தி.சில ஆண்டுகள் கழித்து சிறு பழுதுகள் பார்க்க பெரிய ஏணி கொண்டுவந்து ஒவ்வொரு தூணின் உச்சிக்கும் சென்று பழுது பார்த்தார்கள்.அப்போதுதான் ஒரு விஷயம் தெரிய வந்தது.அதாவது எந்தத் தூணும் மேற்கூரையுடன் இனைக்கப்படாமல் சிறு இடை வெளியுடன் இருந்தது.அதாவது அந்தக் கட்டடக் கலை நிபுணர்,தன்னுடைய தூணில்லா டிசைன் சரிதான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டார்.அதே சமயத்தில் மேயரும் திருப்தியடையும் வகையில் வழிசெய்து விட்டார்.பிறர் மனம் நோகாமல் தன காரியத்தை முடிப்பவனே கெட்டிக்காரன்.

எழுதியவர் : படித்து பிடித்தது (30-Sep-15, 9:30 am)
சேர்த்தது : அகர தமிழன்
பார்வை : 54

மேலே