மாக்சிம் கார்க்கி
நீ தான் உலகிலேயேஉயர்ந்த ரகச் சரக்கு என்றும்,எனவே ஒவ்வொருவரும் உன்னைக் கடித்துத் தின்னவே பார்க்கிறார்கள் என்றும் உனக்குத் தோன்றும்.ஆனால் கொஞ்ச காலம் போனால் ,எல்லோருடைய இதயங்களும் உன் இதயத்தைப்போலத்தான் இருக்கின்றன என்ற உண்மையை உணர்ந்து கொள்வாய்.உணர்ந்த பின் உன் மனம் ஓரளவு சமாதானம் அடையும்.கூப்பிடு தூரத்துக்குக்கூட ஒலிக்காத உனது சின்னஞ்சிறு மணியைக் கோபுரத்தின் உச்சியில்கொண்டு கட்டி ஊரெல்லாம் ஒலிக்கச் செய்ய விரும்பிய உனது அறியாமையைக் கண்டு நீயே நாணம் அடைவாய்.உனது மணியைப் போன்ற பல்வேறு சிறு மணிகளின் கூட்டுறவோடுதான் உனது மணியிசையும் ஒன்று பட்டு ஒலிக்க முடியும் என்பதை நீ உணர்வாய்.
**********
ஒரு மனிதன் நாற்பது வயதைத் தாண்டிய பிறகு,அத்தனை காலமும் தன இதயத்துக்குள்ளே வேண்டாத விஷயங்களோடு முண்டி முண்டிப் போராடிக் கொண்டிருந்த பிறகு,அவனை சீர்திருத்தி வழிக்குக் கொண்டு வருவது என்ன,லேசுப்பட்ட காரியமா?
**********
நாம் உணவுக்காகக் கால் நடைகளைக் கொல்கிறோம்.அதுவே மோசம்.காட்டு மிருகங்களால் ஆபத்து வருமென்று தெரிந்தால் அவற்றையும் நாம் கொன்று தீர்க்கிறோம்.அது சரிதான்.ஒரு மனிதன் சக மனிதர்கள் மீது காட்டு மிருகத்தைப்போல பாய்ந்து கடித்துத் தின்ன முனைந்தால்,அவனை நான் மிருகத்தைக் கொல்வதுபோல கொன்று தீர்க்கத்தான் செய்வேன்.
**********
வாழ்க்கை அமைப்பிலுள்ள குறைபாட்டினால்தான் மக்கள் குற்றவாளி ஆகிறார்கள்.
**********
நல்ல காலத்தை எதிர் பார்த்துத்தான் மக்கள் வாழ்கிறார்கள்.எந்த வித நம்பிக்கையும் இல்லாவிட்டால்,அது எந்த வாழ்வோடு சேர்த்தி?நல்லவர்கள் என்றும் அதிக நாட்கள் தனியாக வாழ்வதில்லை..நல்லவர்களோடு மற்றவர்கள் வந்து எப்போதும் ஒட்டிக் கொள்வார்கள்.
**********
இங்கு கைதிகளும் இல்லை, நீதிபதிகளும் இல்லை.பிடிபட்டவர்களும்,பிடித்தவர்களும்தான் இருக்கிறார்கள்.
**********
--'தாய்'என்ற நூலிலிருந்து .