கேண்மை

நட்பென்னும் பெண்ணே,
தப்பென்னும்
கண்ணே
எப்போதும் வைப்பர் நம் முன்னே
இப்பெயரே சமூக
பார்வை.

மணம் கொண்ட நான்
மனம் பகிர கூடாதாம்
உன்னிடம்

பாவம் பிரிவென்னும்
பாதையை
பாலுணர்சியால்
பார்க்கிறார்கள்

பாவை நீ என்னுடன்
அன்பால் கண்ட நட்பை
பெண்பால் ஆண்பால் கலக்கும்
முப்பாலின்
மூன்றாம் பாலாய்
பார்க்கிறார்கள்

சகியே நீ
சகிக்க வேண்டிய நிலைக்கு
சமூக காரர்கள்
சிதைக்கிறார்
சிநேகத்தை
உன் நட்பால்,
தாயின் அன்பு
கொண்டேன்,
தமக்கை வம்பு
கொண்டேன்,
தோழி நட்பு
கொண்டேன்,
துன்பம் யாவும்
போக்கும் மாயம்
தெய்வ தன்மை
கொண்டேன்,
அதை வாழ்வின்
வரமாய் கண்டேன்.

நட்பை பாலால்
பார்க்கும்
நபர்
பார்வை தெரிந்த
குருடு!

நட்பால்
பார்க்கும் நபரோ
ஞானப் பார்வை
படைத்த பரமன்!

மணம் கொண்டால் என்ன??
மரணம் கொண்டால் என்ன??
மனம் சேர்ந்த
மனிதர்கள்
பாலால் பிரிக்கபட்டாலும்,
அன்பால்
இனைவர் !

இது இறை நிலை
இதற்கு இல்லை
கடை (கடைசி) நிலை
இதன் பார்வை
மக்கள் பிழை

~சிவ சூர்யா

எழுதியவர் : சிவ சூர்யா (30-Sep-15, 11:15 pm)
பார்வை : 134

மேலே