விதியா? சதியா?

நடைபாதையில் பிறந்த
நங்கையர்கள் நாங்கள்...

இயற்க்கை உபாதைகளுக்கு
இடிந்த கட்டிடங்களின் மறைவுகள்..

தாவணி மாற்றும் தொந்தரவு தந்த
இரத்த போக்கிற்கு கிழிந்த துணிகள்...

நீங்கள் வயதுக்கு வந்தால் முறைமாமன் வருவான் ஓலை கட்ட..

எங்களுக்கு எங்கிருந்தாவது
முறைகெட்ட 'மாமாக்கள்' வருவார்கள்...

பல
விமான நிலையங்களை
தொடர்வண்டி நிலையங்களை
பேருந்து நிலையங்களை

கடந்து செல்வதுண்டு..
எங்களை
கடத்தி செல்வதுண்டு...

பேசுகின்ற
போதை பொருட்களாய்
எந்த வித சோதனையும் இன்றி.

நாங்களும் படித்தோம்
பெற்றோம்
சிவப்புவிளக்கின் வெளிச்சத்தில்
தாசி பட்டத்தை.

இது
விதியா ??
சதியா??

~~தாகு


எழுதியவர் : தாகு (31-May-11, 7:50 pm)
சேர்த்தது :
பார்வை : 478

மேலே