பூத்துக் குலுங்குது
பூத்துக் குலுங்குது
-----புன்னகைத் தோட்டம்
பார்த்து சிரிக்குது
-----பூமலர்க் கூட்டம்
மெல்ல விலகுது
----வெண்பனி மூட்டம்
சொல்லாமல் வரும்
-----காலைக் கதிரவனும்
மெல்லத் தொடுவான்
----உன் புன்னகை இதழினில் !
-----கவின் சாரலன்
பூத்துக் குலுங்குது புன்னகைத் தோட்டம்
பார்த்து சிரிக்குது பூமலர்க் கூட்டம்
மெல்ல விலகுது வெண்பனி மூட்டம்
சொல்லாமல் வரும் காலைக் கதிரவனும்
மெல்லத் தொடுவான் உன்புன்னகை இதழையே !
----இது நிலை மண்டில ஆசிரியப்பா
ஆசிரியப்பாவின் ஈற்றுச் சீர் ஏகார விதிப் படி இதழின் என்பதை இதழே
என்று ஒரே ஒரு மாற்றத்தை மட்டும் செய்திருக்கிறேன். ஆர்வலர்கள்
கவனிக்க .முயலுக .
இதை வெண்பாவாக எளிதாக சிறு மாற்றங்களுடன் செய்துவிடலாம் .
அடுத்த பதிவில் செய்து காட்டுகிறேன் .