ஆன்மாவின் உளறல்கள் - உதயா

விழியின் பார்வை
மெதுவாக தனிய
இமைகளின் இடைவெளி
கணிசமாக இறுக

என் மனதின்
ஆழத்தில் உறங்கிய
சிறகினைப் பற்றி
பறக்க துவங்கினேன்

என் பயணத்தின்
பாதைப் பருவங்களை
அலசத் தொடங்கினேன்

நான் பயின்ற
மனிதம் மனிதபிமானம்
ஏடுடனே உறங்கியிருந்தது

கற்றதை கற்பிக்க
முற்பட்ட தருணத்தில்
பகுத்தறிவாளி ஒருவனால்

என் செயல்கள்
முட்களில் சிக்கிய
பூவாகிப் போயிருந்தது

பகுத்தறிவு ஜாம்பவான்கள்
பல யாத்திரையை நடத்தி
தன் மதத்தின் புகழினை
பாடிக்கொண்டிருந்தனர்

இன்னும் சாதி
மதம் இனமெனும்
பிணங்களை மயானத்தில்
சேர்க்காமலே

பாசங்களும் பந்தங்களும்
பணத்திற்காக வேசம் தரித்து
பரிணாமம் அடைந்திருந்தது

இளைஞ்சர்களின்
மீசைகளை சேலைகள்
அலங்கரித்து கிடந்தன

வீரம் மடிந்து போய்
குருதி சாக்கடையாய்
இருகால் மிருகத்தை
நடமாட வைத்திருந்தது

பெண்களின் மானம்
ஆங்காங்கே கிழிந்த
காகிதமாக எறியப்பட்டிருந்தது

உண்மையை விளக்க
சென்ற நானோ
கல்லறையில்
உறங்க போகிறேன்

பறந்த சிறகோடு
மெதுவாக அமருகிறேன்
எதோ ஓர் இடத்தினில்
ஆன்மாவாக

எழுதியவர் : உதயா (3-Oct-15, 2:24 pm)
பார்வை : 87

மேலே