காதல் மந்தகாசம் - 1

முதல் நாள் காலை வேளை:
______________________________________________________________

வழக்கமான காலை நேரம்,
கல்லூரி பஸ் வரும் நேரம்,

சில வாலிபர்கள் டீக்கடையில் ஒதுங்கி நின்று, சிலர் அரட்டைகச்செரியில் அளவலாவிகொண்டே, வருபவர்களுடனும் போவோர்களுடன் பேசிக்கொண்டே இருக்க,
கருமமே கண்ணாயினர் போல சில கல்லூரி மாணவர்களும் கவனமாக காத்திருக்க,

நானும் என் நண்பனின் கடை வாசலில் நின்று கொண்டு இருக்க
அன்றும் பார்த்தேன், அந்த இளங்காலையில் மட்டுமே இந்த ஸ்டாப்பில் ஏனிந்த கூட்டம்?
கேட்டேன் நண்பனிடம்,

"ஏண்டா இந்த மாதிரி ஒரே கூட்டமா இருக்கு இந்த நேரம் மட்டும்?"
" பசங்களுக்கு பொழுது விடிஞ்சா போதாதா, காலேஜ் பஸ்ஸ வழி அனுப்ப வந்திருக்கானுங்க"

"............."

" அங்க பாரு அங்கென நிக்குற பொன்னுங்கல்லெயெ அழகா யாரு தெரியிறா?
" அங்கேயா, அட ஆமா, ஒன்னு கண்ணாடி போட்டுட்டு நிக்குதே, அதுவா?"

"கரெக்ட்டா கண்டு புடிச்சிட்டேயே, அவ தான், அவளுக்காகத்தான் இத்தனை பேரும் இங்கேயே
மொய்க்கிரானுங்க"
"........................"
" டேய், நீ அப்படியே பார்த்துட்டு இருக்காதே, உன்னையும் லிஸ்ட்ல சேர்த்துருவாங்கா அப்புறம்?

"அவள் பேரென்ன?"

"உனக்குத்தான் பொண்ணுன்னா புடிக்காதுன்னு சொன்ன,
அப்புறம் எதுக்கு பேரு கேட்கிறே?"

"சும்மா சொல்றா, கேள்வியெல்லாம் கேட்காம"

அவள் பேரை சொன்னான்.

"பேர் நல்லாதான் இருக்கு, தூரத்தில சரியா தெரியில, பஸ் பக்கம் வந்ததும் பார்க்கலாம்."

சில நிமிடங்களில் கல்லூரி வாகனம் ஊர்ந்து வந்தது; மாணவிகள் ஒன்றன் பின் ஒன்றா ஏறிக்கொள்ள பஸ் கிளம்பியது.

பஸ் என் நண்பனின் கடையினை தாண்டி செல்கையில் ஜன்னல் வழியே அவளின் பார்வை என்னுடன் வந்து மெல்ல முறுவலித்து போனது.

நான் முதன் முதலாய் கண்ணுற்றேன், அவள் நோக்கலில் ஏதோ ஒரு வசீகரம், அலட்சியமாகவும் இருந்தது, அசத்துரமாதிரியும் இருந்தது.

மனசுக்குள்ளே, "என்னமோ ஏதோ..." ரீங்கரிக்க....

"என்னடா, நீயே ஷ்டன்னாயிட்டயா?"

"ம்.ம்.."

"அவ கூட பார்த்த மாதிரி இருந்தது, யாரு இன்னைக்கு இங்க புதுஷான்னு"

"............."

"என்னடா பேச்சே காணோம்?"
"சரி தான், நான் நேத்து தானே வந்திருக்கேன், இங்க என்ன நடக்குதுன்னு பாக்க ஜாலியா தான் இருக்குது..."

".............."

" எங்கடா, எல்லா பசங்களையும் காணோம், போயிட்டானுங்களா?"

"ஏன், இனி அவனுகளை இதே இடம் சாயங்காலம் பாக்கலாம், வந்துடு.."

" சாயங்காலமா, எத்தனை மணிக்கு?"

"அஞ்சு மணிக்கு, நீயும் வந்துரு, உனக்கும் டைம் போகுமில்ல?"

" டேய், நான் பரீட்சை லீவில வந்திருக்கேன், படிக்கணும்டா. இருந்தாலும் ஒரு ரிலாக்ஸ் தேவைதான், சாயந்திரமா வர்றேன், வரட்டா" னு
சொல்லிட்டே கிளம்பி வந்துட்டேன்.
____________________________________________________________________________________
(தொடரும்)

எழுதியவர் : செல்வமணி (5-Oct-15, 11:56 pm)
பார்வை : 244

மேலே