பாரிஸ் கார்னர் ஆரஞ்சு வண்ண தேவதை

கதைத் தலைப்பு : பாரிஸ் கார்னர் ஆரஞ்சு வண்ண தேவதை 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆரம்பவரிகள் : --- 

பாரிஸ் கார்னர் பஸ் ஸ்டாப்பில் பஸ் நின்ற போது ஆரஞ்சு வண்ண சூடிதாரில் 
பஸ் ஏறினாள் ஒரு தேவதை . இறைவன் இவளை யாருக்காக படைத்திருப்பான் என்று யோசித்தேன் . ஒருவேளை எனக்காகத் தானோ என்ற எண்ணம் மனதில் ஓடியது 

அருகில் இருந்தவர் எழுந்து போக. அவள் என்னருகில் அமர்ந்தாள்..... 
இந்த அழகிய 
தேவதையை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும். பேச்சுகொடுத்தேன் ..அவளும் பேசினாள் .இருவரும் பகிர்ந்தோம் தங்கள் பற்றி.

.ஒரு நாள் அல்ல ஒவ்வொரு நாளும் நிமிடமாய் பேசினோம் பழகினோம்..எங்கள் காதல் மலர்ந்தது. ஆனால் எங்கள் காதலை பெற்றோர் எதிர்த்தனர்.ஏன் ஊரே எதிர்த்தது.
ஓடினோம் ஊரைவிட்டு...

எங்களை காணவில்லை என்று சுவர் ஒட்டியில் செய்திதாளில் விளம்பரம் கொடுத்தனர் எங்கள் பெற்றோர். ஊர் சென்றோம்.திருமண ஏற்பாடு செய்தனர்.அதற்கு தேவையான பொருட்கள் வாங்க நான் சென்றேன். எதிர்பாரா விதமாக ரயிலில் அடிப்பட்டு இறந்து விட்டேன்..என் அழகிய தேவதை மனனிலை பாதித்தாள்.

வருடங்கள் ஆனது. நினைவு திரும்பிய அவள் தன் குடும்பதாரோடு வாழ்ந்தாள்.
ஒருநாள் அவள் கனவில் தேவதை தோன்றினாள்.உன் வெண்மை
உடையை மாற்று ..அதில் உள்ள கரையை நீக்கு என்றாள். புரியாமல் விழித்தாள் அவள்.அவள் தாயிடம் சொன்னாள். அதன் அர்த்தம் புரிந்து துவைக்க சொன்னாள் .

உடனே அவளும் துவைத்தாள்.கரை போகவில்லை...
இருக்கும் கரை கண்ட தேவதை மறுநாள் அவள் வீட்டிற்கு வந்தாள்.
அவளுக்கு நேரில் தேவதை கண்டு பயம் வந்தது. அந்த தேவதை கோபத்துடன்,"லூசா டீ நீ!
சர்ப் எக்சல் போடு "கரை போயிடும் என்றாள்.
அவள் ஹா !ஹா !என கொல்லென சிரித்தாள் ..வானுலகம் அதிர...

அதுவரை கிராமத்து தேவதை யாய் இருந்த அவள்
வெண்மை நிறம் மாறி ஆரஞ்சு வண்ண அழகிய பாரிஸ் கார்னர்
தேவதையாய் ஜொலித்தாள்.



கவிஞர் கவிக்கோ சங்கரன் அய்யாவின் வேண்டுகோள் மூலம் ஆர்வத்தில் கதை எழுதினேன் நன்றி அய்யா ..

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (7-Oct-15, 11:02 am)
பார்வை : 169

மேலே