சத்ரபதி சிவாஜியின் மத சார்பின்மை

வரலாற்றை திரிப்பதிலும் அதை சமகால அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்துவதிலும் இந்துத்துவ பாசிசம் அதிபயங்கரமானது!

சத்ரபதி சிவாஜியின் மீது இந்துத்துவ பரிவாரங்கள் கட்டிவிட்ட அத்துனை வகையான வரலாற்று திரிபுகளையும் மிகத்துள்ளியமான வரலாற்று தரவுகளின் மூலம் தகர்த்தெரிந்திருக்கிறார் கோவிந் பன்சாரே!

விவசாயிகளுடனான அரவனைப்பு ஒடுக்கப்பட்ட சமூகமக்களை அரசதிகாரத்தில் பங்கேற்க செய்தது நிலவுடமைகளின் மீதான புதிய பொருளாதார பார்வைகளை நடைமுறைபடுத்தியது தேவையற்ற வரிவகைகளை ஒழித்துக்கட்டியது...

எல்லாவற்றுக்கும் மேலாக இஸ்லாமியர்களின் வழிபாட்டு உரிமைகளை அங்கீகரித்ததோடு அவர்களுக்கான சகலவிதமான ஜனநாயக உரிமைகளையும் பாதுகாத்தது உள்ளிட்ட அனைத்தையும் தக்க சான்றுகளின் மூலம் நிரூபித்திருக்கிறார் பன்சாரே.

தொலைநோக்கு பார்வையுடன் தனது ராஜியத்தை கட்டமைத்த சிவாஜி தன்னளவில் இந்துமத பற்றாளராக இருந்தபோதிலும் மதசகிப்போடு அனைவருக்குமான அரசாக தனது ராஜியத்தை செயல்படுத்திட்ட பன்முகத்தன்மையை பல்வேறு சம்பவங்களின் வாயிலாக பரைசாற்றுகிறது இப்புத்தகம்.

குறிப்பாக ஜிசியா வரிவசூல் குறித்து ஔரங்கசீப்புக்கு சிவாஜி எழுதிய கடிதம் மதசகிப்பு பற்றிய சிவாஜியின் விரிவான பார்வையை சொல்வதாக அமைந்திருக்கிறது.

எது எப்படி இருந்தபோதிலும் நிலவுடமை சமூகத்தின் மன்னராகத்தான் சிவாஜி இருந்திருக்கிறார் என்பதையும் அவரது அரசு மதச்சார்பின்மையிலான அரசு என்கிற உச்சபட்ச புனிதப்படுத்தல்களில் இருந்து மிகவும் எச்சரிக்கையுடன் விளகி நின்று சிவாஜியின் மீதான காவிக் கும்பல்களின் பிம்பத்தை வெளிச்சப்படுத்தி காட்டியிருக்கிறார் பன்சாரே!

எப்பேர்பட்ட அரசனாக இருந்தாலும் வர்னாசரம் தீண்டாமல் விட்டுவைக்குமா என்பதற்கு சிவாஜியும் ஒரு எடுத்துக்காட்டாய் இருந்திருக்கிறார்.இந்திய மண்ணில் தீண்டாமையின் காரணமாக இருமுறை முடிசூடிக்கொண்ட ஒரே மன்னன் சிவாஜி மட்டுமே!

அத்தகைய மன்னனைத்தான் இப்போது இந்துமத பாதுகாவலர் என்றும் பசுக்களின்-பிராமனர்களின் பாதுகாவலராய் திகழ்ந்தார் என்றும் கதைகட்டிவிட்டிருக்கிறார்கள்.

எவ்வளவு பெரிய வரலாற்று வேடிக்கை இது!

அரசா? மதமா? என்று வருகிற போது எல்லா மன்னர்களுமே அவர்கள் இந்துக்களாக இருந்தாலும் முஸ்லீம்களாக இருந்தாலும் அரசைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

மதமென்பது அவர்களுக்கு இரண்டாம் பட்சமாகவே இருந்திருக்கிறது என்கிற மார்க்சிய புரிதலோடு சிவாஜி குறித்த இப்புத்தகத்தை தோழர் கோவிந் பன்சாரே எழுதினார் என்பதற்காகவே அவரை இந்துத்துவ காலிகள் சுட்டுக் கொன்றார்கள்!

காக்கி டிரவுசர்களால் தனி மனிதர்களைத்தான் கொல்லமுடியுமே தவிற பன்சாரேக்களின் கருத்தை ஒருபோதும் கொலைசெய்ய முடியாது என்பதற்கு சான்றாய் இப்புத்தகமோ இந்தி,ஆங்கிலம்,கன்னடம்,மலையாளம் என 24பதிப்புகளாகவும் மராத்தியில் மட்டுமே 2லட்சம் பிரதிகளுக்குமேல் விற்பனையாகி இருக்கிறது.தற்போது தமிழில் தோழர் நடேசன் சிறப்பாக மொழிபெயர்த்து கொடுத்திருக்கிறார்.

வெகு விரைவில் ‪#‎பாரதிபுத்தகாலயம்‬ இரண்டாம் பதிப்பை வெளியிட இருக்கிறது.

எழுதியவர் : (7-Oct-15, 5:55 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 175

மேலே