இவளோ என்கை வசப்படவில்லை

கிட்ட நின்று எட்டியே உதைத்தேன் .
வட்டப் பந்து ஓடியே நின்றது .
கூட்டம் கூடும் கடலின் மணலில்
ஓட்டமாக விளையாடிய சிறுவன் நான் .
வண்ண நிலா சிரித்தது எனைப்பார்த்து .
நானும் பந்துதான் ..! முடிந்தால் பிடியென்று .
முயன்றேன் முயன்றேன் முடியவில்லை .
இவளோ என்கை வசப்படவில்லை .
துடிக்கும் மனத்தைத் துவளச் செய்தே
துள்ளித் துள்ளி ஓடிவிட்டாள் வட்டநிலா .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (8-Oct-15, 10:52 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 67

மேலே