தம்பி ஓர் அன்பு சரித்திரம்

வண்ண வண்ண ஆடையெல்லாம்
வாங்கி யுனக்குக் கொடுத்ததில்லை - உனை
சட்டம் போட்டு மாட்டியுள்ளேன்
சாகும் வரை மனதுள்ளே

ஆறாண்டு நீயில்லாதுன் பிறந்தநாளை
ஆடிப் பாடி சிறப்பிக்கின்றேன் - என்
அகந்தை யனைத்தும் அடங்கிப்போகும்
அவ்வப்போது உன் நினைவாலே

ஆண்டுக்கிரு முறை நீயே எந்தன்
ஆனவம் அழியக் கருவானாய் - கவி
உருவானாய் நான் மெழுகானேன்
உயிர் பிடி துடிக்கின்றேன்

அன்பு சரித்திரம் படைக்க வந்தவுன்னை
அநியாயமாய் சாவுக்கா விட்டு விட்டேன் - இனி
நண்பன் போலே கலந்துரை யாடி மகிழ
நானும் எவ்விடம் சென்றிடுவேன்

நித்தம் (உன் படத்தை) உன்னைக் கடந்து சென்றாலும்
நிஜமாய் நீயில்லாதது தோன்றவில்ல - வருடம்
இரண்டு நாட்கள் மட்டும் ஏன்டா எனது
இதயம் கொத்தித் தின்கின்றாய்

பாவம் என் மனம் தாங்கிடாதென
பரமன் இறையிடம் சொல்லி - நானும்
பலமனைத்தும் சேர்த்துன்னைக் கட்டியணைக்க
பகலில் நேரினில் வாய்யா ஒரு முறை

எழுதியவர் : பேட்ரிக் கோயில்ராஜ் (9-Oct-15, 7:26 am)
சேர்த்தது : Patrick Koilraj
பார்வை : 5710

மேலே