அன்யோன்யம்

மைல்கள் தாண்டிப்
பயணித்துக் கொண்டிருக்கிறது
அத்தான் அன்பே ...
அரைக் கிலோமீட்டரில்
அல்லலுறுகிறது போடா போடி ...!

**********

இருபத்து நான்கின் கீழ் ஏழும்
என்னில் வியாபித்திருக்கிறாய்
தொடர்பு எல்லைக்கு அப்பால்
என்கிறது விஞ்ஞானம் !

**********

அலை மணலிடம்
நுரையெழுதிச் சொன்னது போலில்லை
அவன் அவளிடம்
படகுக்குப் பின்னே சொன்னது

**********

எழுதியவர் : மீ.மணிகண்டன் (9-Oct-15, 8:56 am)
பார்வை : 130

மேலே