தோல்வி கண்டு துவளாதே

வாழ்க்கையின் தொடக்கங்கள் - தோல்விகள்
வாழ்க்கை நுணுக்கங்களை நுகர வைப்பது - தோல்விகள்
நல்ல பாடங்களை கற்பிப்பது - தோல்விகள்
உள்ளத்தை பக்குவப்படுத்துவது - தோல்விகள்
ஆதலால் தோல்வி கண்டு துவளாதே

உனது திறமைகளை பெருக்கெடுக்க செய்யும் சுனை - தோல்விகள்
வெற்றிக்கான விழிப்புணர்வை வகுக்கும் வாய்ப்பாடு - தோல்விகள்
வலிகளை வெற்றியாய் மாற்றும் கோட்பாடு - தோல்விகள்
உன்னை உணர வைக்கும் கண்ணாடி - தோல்விகள்
ஆதலால் தோல்வி கண்டு துவளாதே

கடல் அலை போல முயற்சி செய்
தடைகள் கண்டு தயங்காதே
பேரலைகள் சுனாமியாய் எழும்
அன்று காயங்கள் கரைந்து ஓடும்
ஆதலால் தோல்வி கண்டு துவளாதே

- ரா.கனி

எழுதியவர் : - ரா.கனி (11-Oct-15, 10:30 pm)
சேர்த்தது : ரா கனி
பார்வை : 293

மேலே