ஆட்சி செய்த ‘ஆச்சி’

ஐந்து ஆண்டுகள் அல்ல;
ஐம்பது ஆண்டுகள்
திரையுலகில்
அசைக்க முடியாத சக்தியாக
ஆட்சி செய்து வந்த
மன்னார்குடி ‘மனோரமா ஆச்சி’!

அனைத்து தரப்பினரின் ஆதரவோடு
ஆயிரம் படங்களுக்கு மேலாக நடித்து
நடிப்புலகில் கொடிகட்டிப்பறந்த
தில்லானா மோகனாங்கி..!

வசனகர்த்தாக்களே
வாய்ப்பிளந்து வேடிக்கைப்பார்க்க
வார்த்தை உச்சரிப்புகளால்
வானவேடிக்கை நடத்திக்காட்டிய
வேலைக்காரி முனியம்மா..!

அய்ந்து தலைமுறை நடிகர்களோடு
மலர்ந்த முகத்தோடு நடித்து
அனைவர்மீதும் மரியாதை செலுத்திய
அன்பிற்குரிய ஆபூர்வசகோதரி..!

திராவிட பாரம்பர்யத்தின்ப்பால்
தீராத பற்றுக்கொண்டு
திராவிட முதல்வர்களோடு
தனியா அன்பு கொண்டிருந்த
திரையுலக பெண் முதல்மந்திரி…!

வழக்கொழிந்துப் போகப்பார்த்த
வட்டார பழக்கவழக்க பேச்சுக்களை
தேடி தேடி கண்டுப்பிடித்து
மேடை நாடகத்திலும்
திரைக்காவியத்திலும் புகுத்தி
செழித்தோங்கச்செய்த
செந்தமிழ்ச்சொல்லுக்கு சொந்தக்காரி.!

உச்சாணியில் இருந்தாலும்
உசத்திவிட்டவர்களை
கடைசிவரை மறக்காமல்
உதவிக்கேட்டு வந்தவர்களை
ஊதாசினப்படுத்தாமல்
உள்ளதை அள்ளிக்கொடுத்த
உயர்ந்த உள்ளத்து உரிமையாளி..!

நாடகங்களில் நடித்து நடித்து
ஞாபகசக்திக்கே ஞானம் ஊட்டிய
நடிப்புலகின் ஞானி
நடிகர்களின் ஏணி
சுறுசுறுப்பில் தேனீ
நகைச்சுவையில் ராணி

நேரம் தவறாமையில்
சாலச்சிறந்த வாணி
நேற்றைகளை மறவாத
தலைச்சிறந்த வேணி
நேர்மைக்கு பெயர்ப்போன
மிகச்சிறந்த நண்பி

கலையுலகின் அரசி
ஆச்சி மனோரமா
இன்று நம்மிடம் இல்லை;
அந்த மா கலைஞியின் இழப்பு
நம் தலைமேல் விழுந்த பேரிடி..!
அந்த நவரச நாயகியின்
இருப்பிடத்தை அலங்கரிக்க
அவரின் அடுத்த வாரிசாக
இனியொருவரை
இறைவன் படைத்தால்தான் உண்டு..!

அவர் விட்டுச்சென்ற
வெற்றிடத்தை நிரப்ப
இன்றைய கலைஞர்கள் எவராலும்
நிச்சயம் முடியாது என்பதே நிதர்சனம்..!

அந்த நல்ல ஆத்மாவின் ஆவி
ஆண்டவின் நிழலடியில்
இளைப்பாறச் சென்றுள்ளது,
அது மீண்டும் வேறொரு உருவில்
நம்மிடம் விரைவாகத் தோன்ற
நாமெல்லோரும் சேர்ந்து
கூட்டாக பிரார்த்திப்போம்..!

எழுதியவர் : இரா.மணிமாறன் (12-Oct-15, 8:16 am)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
பார்வை : 78

மேலே