தோல்வி கண்டு துவளாதே

தோல்வி கண்டு துவளாதே...
வெற்றி விடியலின் ஆரம்பம் தோல்விகள்தான்..!
இன்னும் முயற்சிகொள்...
அந்த முயற்சியெனும் மோகனங்களை
மனதின் உள்ளரங்கில் தன்னம்பிக்கை
சுதிகொண்டு அரங்கேற்று....!

நாடி நரம்புகளின் ஒவ்வொரு அணுக்களுக்கும்
தன்னம்பிக்கையோடு அறிமுகப்படுத்து..
முதல்முயற்சி அமாவாசையாய் அரூபமாகலாம்...
நம்பிக்கை வை.. அதற்குப்பிறகுதானே வளர்பிறை நாட்கள்..!..!

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (12-Oct-15, 9:27 am)
பார்வை : 588

மேலே