நீ காதல்கொள்
சொல்ல வந்த சொல்லை
விழுகியதுண்டா?
மௌனத்தை தவம் கேட்டு
அலைந்ததுண்டா?
யாருக்கும் தெரியாமல்
அழுததுண்டா?
எல்லாம் தெரியும் நீ
காதல்கொள்!!
♦
உனக்குள்ளே நீ புலம்புவாய்!
உறக்கத்தில் சிணுங்குவாய்!
கவிதைகள் கிறுக்குவாய்!
காகிதத்தை கசக்குவாய்!
எல்லாம் நடக்கும் நீ
காதல்கொள்!!
♦
உந்தன் பெயரை நீ மறக்ககூடும்!
உன்னை சுற்றி இருப்பதெல்லாம்
நீ மறந்தபோக நேரும்!
உன் மூளையில் அவள் முகம்
மட்டுமே பதியக்கூடும்!
உன் மனதில் அவள் காதல்
மட்டுமே நிறையக்கூடும்!
எல்லாம் கூடும் நீ
காதல்கொள்!
♦
பூக்களிடம் நீ நலம் கேட்பாய்!
தென்றலுக்கு கொஞ்சம் இடம்
கொடுப்பாய்!
மேகத்தில் அவள் முகம் காண்பாய்!
நிலவுடன் ஒத்திகை நடத்துவாய்!
எல்லாம் செய்வாய் நீ
காதல் கொள்!!
♦
இறகு மோதியே உன்னால்
உடைந்து போக முடியுமே!
பறவையின் சிறகு இல்லாமல்
உன்னால் பறந்தே போக முடியுமே!
காற்றில்லாமல் உன்னால் நிலவில்
உயிர் வாழ முடியுமே!
தெரிந்தவரோ தெரியாதவரோ
பிறர்க்கு உன்னால் உதவ முடியுமே!
எல்லாம் முடியுமே நீ
காதல் கொள்!
♦
காதல் கொண்டால் சாத்தியமில்லாதது ஏது?என்பதை
பிறகு உணர்ந்து கொள்!!
♦