மரம் வளர்ப்போம் மனிதனாக

வள்ளுவன் முதல்
வைரமுத்து வரை
மரங்கள் பற்றி
பாடாதவர் உண்டோ !......
எழுதாவர் உண்டோ !!.......

பாடிய பாடல்கள் யாவும்
செவியோடு சிதைந்து போனதோ.......
எழுதிய கவிதையாவும்
எண்ணங்களோடு கரைந்து போனதோ........

அன்று
மழைக்காக ஏங்கிய
மரங்கள் யாவும்.....

இன்று
அரசியல்வாதியின்
பிறந்த நாளுக்காய்
ஏங்குகின்றன.......

அன்றாவது தம்
சந்ததியர் மண்ணில்
விதைக்கப் பாடுவார்
எனும் நிலை
எவர் விட்ட
சாபமோ.......

ஒரு நாள்
பெரு விழாவில்
ஊரே கரவோசை
எழுப்ப எழுந்தன
மரம் அல்ல
மரம் எனும்
தலைப்பில் சிறப்புரை......

மரம் வைத்தவன்
தண்ணீர் ஊற்றுவான்
எவன் சொன்ன
வார்த்தை இது........

சென்ற வருடம்
எண்ணிக்கையில்
வெற்றி கொண்ட
மரம் நடு விழா........

இந்த வருடம்
வரை பேசப்படுகிறது
அதே இடத்தில்
போடப்பட்ட மரம்
நடு விழாவில்......

பகட்டு வாழ்விற்கு
ஆயிரம் கன்றுகள்
நட்டவர் அவர்
வேலை பார்பாரா
அதை விடுத்து – தினம்
என்னைத் தான்
ஏறெடுத்துப் பார்பாரா......

காலம் தவறா
மழை பொழிந்தால்
வீதியில் விட்ட பிள்ளையாய்
நான் பிளைத்துக் கொள்வேன்.......

விவசாயமே பொய்த்துப்
போகும் மழையால்
முதியோர் இல்லத்துக்கும்
வழி தெரியா
தாயைப் போல்
என் வாழ்க்கை –எவர்
அறிவார் மரம் வளர.......

மனிதன் இல்லையேல்
இவ்வுலகில் மரம் உண்டு !......
ஆனால்
மரம் இல்லையேல்
எவ்வுலகிலும் மனிதன் இல்லை !!.......

இதை
உணராத மரம்
காக்கின்றது மனிதனை......

அதை
உணர்ந்த மனிதன்
அலிக்கின்றான் மரத்தினை.......

-தஞ்சை குணா

எழுதியவர் : மு. குணசேகரன் (17-Oct-15, 1:06 pm)
பார்வை : 416

மேலே