மறக்கப்பட்ட கண்ணீர்

யாரோ அழுது விசும்பிய
காற்று ஒன்று தலை சாய்த்து அசுவாசித்து கொள்ள ஆறுதலாய் மடி தேடியது...

அதுவரை தான் அவளுக்கு அனுமதி போலும் அழுவதற்கும் கூட..

இனி என்றுமே பார்த்து விட முடியாது ஒன்றை கடைசியாக பார்த்து விட
கடைசி சொட்டு கண்ணீரையும் உயிரை பிழிந்து கொண்டு வந்தாள்..

படுத்து கிடக்கும் அவனோ காதுகளிலும் ஏதோ அடைத்து கிடந்தான்..

உயிரின் ஒரு துளியை மட்டும் மிச்சமாய் கொண்டு அவளும் கிட்டத்தட்ட இறந்தே இருந்தாள்..

அவள் அவனுக்காக புறம்தள்ளியவள்

இப்போ கண்ணீரை பெற்று போட்டு கொண்டு இருந்தாள்...
முகம் வடிந்து, மார்பு வந்த கண்ணீரும் செத்தே போயிருக்கும் இவள் நெஞ்சு எரிவதை பார்த்து..

கடைசியாக பார்க்கரவங்க பார்த்துக்கோங்க

எப்படி ஏற்று கொள்ளவாள்
இது கடைசியென்று
எப்படி தாங்குவாள்
அவள் தொட்ட கைகளும்,
அவள் சாய்ந்த மார்பையும்,
அவள் முத்தம் இட்ட உதடுகளையும்
மண்ணிற்கு திங்க தர..

கூட்டமாய் தூக்கி கடக்க தொடங்கினர்
அங்கு, பொட்டையும் பூவையும் தொலைத்த ஓர் உயிர், உயிரோடு இறப்பதை பொருட்படுத்தாமலே...

செடிகளில் இருந்து கொலை செய்யபட்ட பூக்களை தூவிக் கொண்டே
அந்த கடைசி ஊர்வலம்
கடந்து போனது
அங்கு மலர் தொலைத்த வண்ணத்துப்பூச்சியை யாரும் பார்காமலே..

மரணத்தை சபித்துக் கொண்டு
நானும் கடந்து போனேன்
கண்ணீரை துடைத்துக் கொண்டே ..

மஞ்சள் நிலா🌙

எழுதியவர் : (19-Oct-15, 12:26 pm)
சேர்த்தது : நாகராஜன் நகா ஸ்ரீ
பார்வை : 79

மேலே