காதல் கிறுக்கு
வாசலிலே பூசணி பூ வைக்கையிலே
விழியோரம் வந்து நின்ற என்னவனே
உன் குறும்பான பார்வையிலே
முகம் சிவந்து போகையிலே
மர்மமாய் கண்ணடிச்ச ஏன்னவனே
வெக்கபட்டு நான் மின்னலென திரும்புகையில்
இன்னுமொரு கண்ணடிச்சே
பார்வையை நோக்குகையில்
என் பின்னே தங்கையை பார்த்தடிச்ச
பேய் மகனே

