கைமாறு

அம்மா! என் ஆருயிர் அம்மா
இம்மண்ணில் நான் கண்ட தெய்வமே!
நீ அன்புடன் படைத்த அறுசுவை உணவும்
கனிவுடன் ஊட்டிய அன்பும் பாசமும்
அருமையாய் கற்பித்த
நேர்மையும், கண்ணிய பாதையும்
ரத்தமும், சதையுமாய் என் உள்ளே ஆகி
ஒவ்வொரு அணுவிலும் கலந்து
நேர்த்தியாக செதுக்கினாயே
உன்னுடைய இந்த பெண்ணை !
மலைப்பாக இருக்கிறது நினைக்க
என் ஆருயிர் அன்னையே
இன்னும் எவ்வளவு ஜன்மம்
நான் எடுக்க வேண்டும்
உனக்கு கைமாறு செய்ய?

எழுதியவர் : ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் (19-Oct-15, 8:52 pm)
Tanglish : kaimaru
பார்வை : 510

மேலே