உன் காதல் சொன்ன காலமிது

இதோ
இந்த நவராத்திரி காலங்களில்தான்
கொலுவாய் வந்தமர்ந்தாய்
என் இதய அலமாரியின்
ஒவ்வொரு படிகட்டுகளிலும்
அன்பின் உருவமாய்
அன்னையின் வடிவமாய்
மழலையாய் மனைவியாய்
இன்னும் எத்தனை எத்தனை உறவுகள்?
அத்தனை உறவுகளையும் ஒன்றாய் குழைத்து காதலியாய்...
அன்றே
ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் நீ
கொலு வைத்த பொம்மைகளையெல்லாம்
ஓர் நாள் திரும்ப பெறுவேன் என்று
ஆமாம்.. சொல்லியிருந்தால்
கொள்ளை போன பொம்மைகளை நினைத்து
குமுறி அழும் குழந்தையாய்
இருந்திருக்க மாட்டேன் நானின்று..

எழுதியவர் : மணி அமரன் (20-Oct-15, 1:52 pm)
பார்வை : 317

மேலே