கொம்பன் வரவே இல்ல

டேய் படிப்பை முடிச்சு வேலைக்கு வந்து 30 வருசம் ஆகுது. நான் கடைசியா சினிமாப் பாத்தும் 30 வருசம். சின்னத் திரையிலே கூட நான் வெட்டிப் பொழுது போக்கு நிகழ்சசிகளப் பாக்கமாட்டேன். செய்திகள், கவியரங்கம், பட்டிமன்றம், விவாதங்கள் இந்த மாதிரி நிகழ்ச்சிளப் பாப்பேன். பெரும்பாலும் ஓய்வு நேரத்திலே பரிசு பெற்ற நாவல்கள் இலக்கியப் புத்தகங்களத் தாம் வாசிப்பேன் உலகப் பொதுமறையில் ஒரு நாளைக்கு ஒரு அதிகாரம் படிப்பேன்.


சரி இதையெல்லாம் எதுக்கு எங்கிட்டச் சொல்லற?

இன்னிக்கு சரஸ்வதி பூசையை முன்னிட்டு சன் தொலைக் காட்சிலே கொம்பன்-ன்னு ஒரு சினிமா காட்டப் போறாங்கன்னு வீட்டிலே சொன்னாங்க. நானும் அத நம்பி உக்காந்து கொம்பன் வருவான்னு எதிர்பாத்து ஏமாந்து போயிட்டேண்டா.

ஏ அந்தப் படத்தை சன் டீவிக்காரங்க போடலியா.

படத்தப் போட்டாங்கடா. கடசி வரைக்கும் எந்தக் கொம்பனும் வரல. நான் ஏமாந்து போயிட்டேண்டா.




என்னடா சொல்லற?


கொம்புள்ள மனுசன் வருவான், அவனப் பாக்கலாம்னிருந்த என்னோட ஆசை நெறவேறலடா.

எழுதியவர் : மலர் (22-Oct-15, 12:27 am)
பார்வை : 88

மேலே