இப்படி நீ எழுத்துக்கூட்டி படித்தால்

தயவுசெய்து நீ
இதற்குமேல் புன்னகைக்காதே
இன்று மட்டும்
எத்தனை கிரகனங்களை
இவ்வுலகம் தாங்கிக்கொள்ளும்

********************************************************

தேவதைகளுக்கு
சிறகுகள் இருக்குமா?
என்ற சந்தேகம்
உன்னை பார்த்த பிறகு தான்
எனக்கு வந்தது

********************************************************

பொறாமை பொங்கி வழிகிறது
உன் அடையாள அட்டையை பார்க்கையில்
தினமும் எட்டு மணி நேரம்
உன் கழுத்தில் ஊஞ்சலாடினால்
பொறாமை வராதா என்ன?

********************************************************

உன்னை கடித்த கொசுவிற்கு
பாராட்டு விழா நடந்ததாம்
தேவதையை கடித்த கொசுவென்று

********************************************************

தங்கத்திலிருந்து
வெள்ளி வரும் அதிசியம்
நீ
வெயிலில் நடக்கும்போது
மட்டும் காணமுடிகிறது

********************************************************

முன்னிரவு நிலவு
உன்னை கைக்காட்டி
என்னிடம் கேட்டது
'யாரிவள், என்னுருவம் கொண்டு
பூமியில் திரிகிறாள்' என்று

********************************************************

எதற்காக கஷ்டப்பட்டு
கவிதை எழுதுகிறாய்?
பேசாமல்
ஒரு பிள்ளையார் சுழி
போடு போதும்

********************************************************

மண் வாசம்
வீசும் போதெல்லாம்
நீ எங்கேயோ
வியர்த்து நிற்கிறாய்
என்று நினைத்துக்கொள்கிறேன்

********************************************************

பனித்துளியை விட
நீ மட்டும் ஏன்
எடை அதிகமென
யோசித்து பார்த்தேன்,
பிறகு தான் புரிந்தது
என் மரமண்டைக்கு
அது உன் அழகின்
மொத்த எடையென்று

********************************************************

இந்த கவிதை மிகவும்
அழகாக இருக்கிறதே
என்றாய்
இருக்காதா பின்னே
இப்படி நீ எழுத்துக்கூட்டி
படித்தால்

********************************************************

எழுதியவர் : கோபி சேகுவேரா (24-Oct-15, 1:31 pm)
பார்வை : 163

மேலே