உன்னை தேடும் இதயத்தில் வலி

கண் சிமிட்டும் தூரத்தில் அம்மா.....
கை பிடித்தபடி அருகில் தங்கை......
குழுமியிருக்கும் ஆயிரம் உறவுகள்.....
ஆனாலும் இதயம் முழுதும் வலி.....
உன்னை தேடும் இதயத்தில் வலி ....!!!

ஆயிரம் நண்பர்கள் இணையத்தில்......
ஆயிரம் மின் அரட்டை நொடியில்......
ஓசை கேட்காத பல நூறு குரல்கள்......
பார்க்க முடியாத பல நூறு சினேகங்கள்......
இருந்தும் எதையும் மனம் விரும்பவில்லை ...
உன்னிடம் வரும் ஒரு வார்த்தைக்காய் ....
உன்னையே தேடும் இதயத்தில் வலி ....!!!

அழ வேண்டும் என்று இனம் புரியா ஆவல்.....
முடியாமல் தவிக்கிறேன் விரும்பாதா....
திருமண நிச்சயத்தை தவிக்கிறேன் உயிரே ....
யாருக்கு புரியும் என் "காதல் வலி '' ......
இதயத்தை இழந்தவர்களை தவிர ...???

+
கே இனியவன்
காதல் சோக கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (26-Oct-15, 9:18 pm)
பார்வை : 632

மேலே