பழக்கத்தை மாற்று
பெண்ணே,
இனி
வாய்மொழி மறைத்து
கண்ணீரில் பேசு என்னிடம்!
வார்த்தையை இழந்து
கவிதையில் பேசு என்னிடம்!
கையால் தொடுவதை மறந்து
கண்ணால் தொடு என்னிடம்!
தூக்கத்தின் புலம்பல் வெறுத்து
கனவில் புலம்பு என்னிடம்!
நம் பயணத்தை புதைத்து
உன் பயணம் சொல் என்னிடம்!
வாரம் ஒருமுறை மட்டும்
தொலைபேசி கொள் என்னிடம்!
மாதம் ஒருமுறை நேரில்
பேசவேண்டும் சொல் என்னிடம்!
ஆங்காங்கே எனை பார்த்தால்
மறக்காமல் நலம் கேள் என்னிடம்!
ஆனால் கண்ணே,
நெஞ்சு கனக்க,
கண்ணீர் பெருக,
என் உள்ளம் உடைந்து
சொல்கிறேன்,
என் காதல் மறக்காமல்
புதுவாழ்வு தொடங்கு அவரிடம்!!