முத்தொள்ளாயிரம் மூட்டிய கனல்கள்--03

பணியின்றி வீட்டில் படுத்துக் கிடப்பான்,
அணிசேர்ந்து தேர்தல் அலுவல் – பணிசெய்து
வாக்களித்தே ஆட்சி வழங்கக் குடிபழகும்
சீக்களித்தார் திட்டங்கள் செய்து!----------------------------------------------------------------------------------------------------------15.

வெளியாளாய் நின்று,பல வேடிக்கை பேசிக்
களியார்போல் வேசமிட்டுக் காட்டி – ஒளித்தார்க்கே
தேர்தலிலே கூட்டுத் தெரிவித்தார்! ஆட்சி,கை
சேர்ந்ததுமே சென்றார் சிரித்து!-------------------------------------------------------------------------------------------------------------16

அளியன்,அல் லார்க்கே அருள்மறுக்க லாகும்!
எளியர்,யாம் அம்மாவே என்றோம் – ஒளியென்றோம்;
வாக்களித்தோம்; எங்களது வாழ்க்கைத் துணைகளோ
சாக்கடையில்! ஈதோ சரி?-------------------------------------------------------------------------------------------------------------------17

தாளாற்றி வந்தபணம் தண்ணீர்க் கடைகளிலே
பாழான தெல்லாம் பழங்கதை! – ஆளாம்,முன்
பள்ளிக்கென் றான பணத்தோ(டு) எதிர்காலம்
பிள்ளையும் ஏன்போக்கப் போச்சு?-------------------------------------------------------------------------------------------------------18

வருத்தம் தவிர்ப்பீர்! வரிசையில் வாரீர்!
விரும்பும் மதுகிடைக்கும்; வாங்கி –இருந்து
களித்தேகு வீர்!இதுவோ காவிரி இல்லை;
ஒளிப்பார், நிறுத்துவார் இல்!----------------------------------------------------------------------------------------------------------------19

அற்பமாய் வாழும் அவதியறு! இவ்விடமே
கற்பமாய்க் கொண்டு கவலைவிடு!- நிற்பதா?
காவிரி யாயிது கர்,நாட கச்சரக்கே!
நீவிரிப் பாய்,உனது நாக்கு!--------------------------------------------------------------------------------------------------------------------20.

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (2-Nov-15, 12:22 pm)
பார்வை : 57

மேலே