தாய்

தாய்
அவள்
உதிரத்தில் குளித்து
உயிர் வளர்த்தேன்..
அவள்
உதிரம் குடித்து
உடல் வளர்த்தேன்..
அவள்
உலகைக் கொடுத்தாள்,
உவகை கொடுத்தாள்
உணவைக் கொடுத்தாள்,
உணர்வைக் கொடுத்தாள்
அவள்
அடிகளில் தான்
அகிலம் அடக்கம்
ஆண்டவன் அவள்
அன்பினில் முடக்கம்