பாடல் -முஹம்மத் ஸர்பான்

காத்துக்கு பூக்கள் சொந்தம் பூவுக்கு வாசம் சொந்தம் என்ற ராகத்தில்

கடலுக்கு அலைகள் சொந்தம்
நீருக்கு மீன்கள் சொந்தம்
மீனைப் போல் கண்ணழகி வருவாளா
என்,நெஞ்சுக்கொரு வண்ணம் தீட்டி தருவாளா

மலரோடு பேசவும் இல்லை
மடி மீது தூங்கவும் இல்லை
எனக்கொரு தேவதை வருவாளா
என் நெஞ்சுக்குள்ள உள்ளம் வைத்து மறைவாளா
__
பத்து நொடிகள் கனவில் மிதக்கிறேன்
அடுத்த கணமே கண்ணை விழிக்கிறேன்
என்னை விட்டு கனவே நீயும் போகாதே!
தள்ளி போகாதே!!

பூவாய் மாறி வாசம் வீசனும்
காற்று வந்தால் சருகாய் உதிரனும்
விண்ணில் மண்ணில் என்னை நானும்
கரைத்திடனும்,அழகாய் சிரித்திடனும்

இமைகள் மூடி அவளை மறைக்கிறேன்
தேடி தேடி நானும் தொலைகிறேன்
விட்டு போன சுவாசம் என்னை தொட்டிடுமா
அவளை காட்டிடுமா

கடலுக்கு அலைகள் சொந்தம்
நீருக்கு மீன்கள் சொந்தம்
மீனைப் போல் கண்ணழகி வருவாளா
என்,நெஞ்சுக்கொரு வண்ணம் தீட்டி தருவாளா
__
நிலவே நிலவே
வண்ணம் தருவியா
பெண்ணின் முகத்தில்
மஞ்சள் பூசனும்
அவளை ஒளிந்து
நிலவே நீயும் பார்க்காதே
தேய்ந்து போயிடுவாய்

குயிலே குயிலே
பாட்டு தருவியா
பாட்டின் மேலே
தொட்டில் காட்டனும்
கூட்டின் வழியே
குயிலே நீயும் பார்க்காதே
காதல் தீண்டாதே

மலரே மலரே
சோலை தருவியா
சோலை வழியே
சேலை நெய்யனும்
பஞ்சு உடலில் மச்சம்
நானும் ஆகணுமே!!
தோளாய் மாறனுமே

கடலுக்கு அலைகள் சொந்தம்
நீருக்கு மீன்கள் சொந்தம்
மீனைப் போல் கண்ணழகி வருவாளே
உன் நெஞ்சுக்கொரு வானவில் தருவாளே

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (3-Nov-15, 5:57 am)
பார்வை : 95

மேலே