அழகை ஆராதிப்பேன்

என்னவனே..
நேற்றிரவு வெண்ணிலவை நேரில் கண்டாயோ..!!??!!
இன்று பௌர்ணமியாம் - ஆனால்
விண்ணில் நிலவை காணவில்லையே..!!?!!
உன் முகம் பார்க்க
தயங்கி தேய்ந்து விட்டதோ..!!??!!
என்னை விட இவன் அழகா, என்று
கோவத்தில் கரைந்து விட்டதோ..!!??!!
உன் அழகை பார்த்து
பொறாமையில் பதுங்கிக் கொண்டதோ..!!??!!
உன் அழகில் மயங்கி,
வெட்கத்தில் ஓடி ஒளிந்து கொண்டதோ..!!??!!
போகட்டும் அன்பே.. உன் தோட்டத்தில் பூத்திருக்கும்
பூக்களின் பக்கம் போகாதே - அவைகளும்
உன் அழகில் வியந்து
வாடி உதிர்ந்துவிடும்..
விண்ணோடு உறவாடும் நிலவை கேள்;
உன் அழகின் அருமையை சொல்லும்..!
வீசும் தென்றலோடு விளையாடும் மலர்களை கேள்;
உன் அழகின் பெருமையை சொல்லும்..!
உன் விழிகளை பார்த்து தான்
மீன்களும் நீந்த கற்றுக்கொண்டதோ..!!??!!
உன் குரலை கேட்டு தான்
குயில்களும் பாட கற்றுக்கொண்டதோ..!!??!!
உன் நடையை கண்டு தான்
அன்னமும் நடை பயின்றதோ..!!??!!
பெண்ணிற்கு உவமையாம் இயற்கை..
அந்த இயற்கையே உன் அழகை கண்டு தலை குனிந்தால்,
பெண்களை எப்படி வர்ணிப்பது..!!??!!
அனு அனுவாய் ரசித்த பின்னும்
அலுக்காத உன் அழகு!
ஒரு கணம் விழி மூடி யோசித்தால்
என் கற்பனையும் துடிக்கிறது
உன் அழகை வர்ணிக்க.. இருந்தும்
தமிழ் வார்த்தைக்கு தான் பஞ்சம்.. ஆம்
உன்னை படைத்த பிரம்மனே வியந்து திகைப்பான்..
உன் அழகை கண்டு..
தமிழ் வார்த்தைகள் மட்டும் விதி விலக்கா என்ன..!!
தெரிந்தே பெயர் வைத்தாளோ, உன் தாய்...... மோகன சுந்தரம் என்று..!?!
அழகு தான்.. கொள்ளை அழகு தான்..!
என் கற்பனையில் உதித்து உதிர்ந்த வார்த்தைகள் கூட அழகாய் தெரிகிறது,
உன் அழகை பற்றி எழுதிய பின்..!!!!!
இன்னும் தொடருவேன்..
அன்போடும், ஆசையோடும்,
நெஞ்சில் காதலோடும்,
என்றும் உன் அழகை ஆராதிப்பேன்..!!

எழுதியவர் : சுதா ஆர் (3-Nov-15, 6:02 pm)
சேர்த்தது : சுதா ஆர்
பார்வை : 125

மேலே