அழகு

அழகா அழகா,
நீ அழகா,
எனை வீழ்த்துகின்ற உன்
விழி அழகா?
எனை கொல்லுகின்ற உன்
சிரிப்பு அழகா?
எனை சுவைக்கின்ற உன்
இதழ் அழகா?
எனை உருகவைக்கும் உன்
ஸ்பரிசம் அழகா?
எனை மயங்கவைக்கும் உன்
அன்பு அழகா??

ஆயிரம் ஆண்களுக்கு மத்தியில் கூட உன்னை நான் இனம் கண்டு கொள்வேன்.. ஆம் அவர்களில்
என் கண்ணை கிழித்ததும்,
என் நெஞ்சை வீழ்த்தியதும் உன் விழிகள் மட்டும் தானே..!!

காதல் போர் களத்தில்
அன்பெனும் ஆயுதம் ஏந்தி
உன் அழகால் எனை கொன்றாய்.. அதில்
வீழ்ந்தவள் இன்னும் எழவில்லை.!!

அழகிற்கு அர்த்தம் கேட்டால் விளக்கி சொல்லலாம்.. ஆனால்
அழகே உருவமாய் நின்று விளக்கம் கேட்டால், என்னென்று சொல்வேன்??

இறைவன் முதலில் உன்னை படைத்திருந்தால்..
விண்ணில் நிலவு, நட்சத்திரம்,
மண்ணில் மலர், மலை,
நதி, நங்கை என எதையுமே படைத்திருக்க மாட்டான்..
உனக்கு ஈடாய் இவ்வுலகில் எதுவுமே இல்லை என்றுணர்ந்தானோ என்னவோ..
உனக்கு பின் படைத்த எதுவும் அழகாய் இல்லை..!!

வாடி விடும் மலரை விட,
வாடாத உன் முகம் அழகு!
வற்றி விடும் நதியை விட,
வற்றாத உன் காதல் அழகு!
தேய்ந்து வளரும் நிலவை விட,
தேயாத உன் புன்னகை அழகு!
வீசி வரும் தென்றலை விட,
எனை தீண்டி வரும் உன் சுவாசமே அழகு!
மாறி வரும் உறவுகளில்
எனை வாழவைத்த உன்
உறவு மட்டுமே அழகு!
என் மீது நீ காட்டும்
உயர்வான, உண்மையான,
நேர்மையான, நிஜமான,
ஆழமான, அழகான
உன் அன்பு மட்டுமே அழகோ அழகு..!!!!!

எழுதியவர் : சுதா ஆர் (3-Nov-15, 6:07 pm)
Tanglish : alagu
பார்வை : 200

மேலே