சொர்கத்தின் திறவுகோல் - ஆனந்தி

பச்சை கண்ணாடி
போட்டுக் கொண்டு
காண்பவை
அத்தனையும் பச்சை
என்றால்?....

முதலில் நிமிர்ந்து
நில்....

நண்பனால் உன்
பலவீனம் வெளிப்படும்
எதிரியால் தான் - உன்
பலம் வெளிப்படும்....

தோல்விகளும் சுவை
பெறும் - நாளைய
வெற்றிக்கு பின்னால்....

அடுத்த நாழிகையே
எதுவும் மாறலாம்....

காத்திருத்தல் கால
கொடுமை அல்ல
புறக்கணிக்கப்படுவது
புறமுதுகிடுதலும் அல்ல....

மரம் வெட்டப்படுவது
சோகம் தான் - மீண்டும்
துளிர்ப்பது (வெற்றியின்)
முயற்சி தானே....

உன் எண்ணம் உயர்வாய்
சிந்தனை சீராய்
செயல் செம்மையாய்
இருக்கட்டும் - எதுவும்
எம்முற்சியும்
சாத்தியம் தான்....

சொர்க்க வாசலின்
திறவுகோல்
உன்னிடமே(உன்னிடம் தான்).....

எழுதியவர் : ஆனந்தி.ரா (4-Nov-15, 10:32 am)
பார்வை : 189

மேலே