இவர்களே மனிதர்கள் ஆகட்டும்

10. இவர்களே மனிதர்கள் ஆகட்டும்.


1924 - ஆம் வருடம் இந்து- முஸ்லீம் கலவரத்தினால் அதிருப்தி அடைந்து காந்திஜி டெல்லியில் மௌலானா முகம்மத் அலியின் வீட்டில் தங்கியிருந்தார். ஒரு நாள் மாலை நேரம் அலிகாரிலிருந்து வந்த நண்பர் காந்திஜியைப் பார்க்கலாமா என பண்டிட் சுந்தர்லால்ஜியிடம் கேட்டார்.

காந்திஜி அவ்வமயம் அறையில் தனியாக உட்கார்ந்து இருந்தார். கதவு மூடப்பட்டிருந்தது. சுந்தர்லாலும் அவர் நண்பரும் கதவைத் திறந்ததும், சுந்தர்லாலின் பார்வை காந்திஜியின் முகத்தில் பட்டது. அடிகள் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறாரென்பதை அவர் உணர்ந்தார். அவர்களுடைய கால்கள் பின்சென்றன. அதேசமயம் ஓசைகேட்டு, காந்திஜி அவர்களைத் திரும்பி வருமாறு கூறினார். இருவரும் முன்னால் போய் உட்கார்ந்தனர். நாட்டில் நடைபெறும் இந்து முஸ்லீம் கலவரத்தினால் அவர் எழுப்பியவாறே சுந்தர்லால், ”பாபு, இந்த முறையில் தாங்கள் இந்து-முஸ்லீம்களை ஒன்றாக்க முடியம் என நினைக்கிறீர்களா?” எனக்கேட்டார்.

”நீ சொல்வதின் பொருள் என்ன?” என வினவினார் காந்திஜி.

பண்டிட்ஜீ, ”இந்து இந்துதான்; முஸ்லீம் முஸ்லீம்தான்; இவர்கள் எப்படி ஒன்று சேரமுடியும்?”

காந்திஜி பதில் கூறினார், ”உன் பொருள் என்ன என்பதை நான் அறிந்தேன். நீ ஜூஹூவில் கூட இதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தாய், என்னிடம் கேட்பானேன்? எல்லோரும் நாஸதிகர்களாகிவிட்டால் மிக நன்றாக இருக்கு என்றதான் நான் சொல்ல வேண்டியிருக்கிறது. இவர்கள் மறுப்பதால் எந்தக் கடவுளரும் அழிந்து விடுவாரா, என்ன? ஆனால் இவர்களோ மனிதர்களாகட்டும்! நான் கூறுவதை யார்கேட்கிறார்கள்! கபீர் சொல்லிவிட்டுச் சென்றார். நானக் சொல்லிவிட்டுச் சென்றார். நான் சொல்லுவதை யார் கேட்கிறார்கள்? மேலும் நீ என்ன ஓர் சாதாரண வஸ்துதானே? உலகம் தன் பாதையிலேயே சென்றுகொண்டிருக்கிறது.”

இதைச் சொல்லி விட்டு காந்தியடிகள் மௌனமாகிப் பின் மறுபடியும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிவிட்டார். இருவரும் எழுந்து வெறியே வந்தார்கள். மௌலானா முகம்மது அலியும் ஹகீம் அஜ்மல்கானும் வெளியே இருந்தார்கள் பண்டிட்ஜி அவர்களிடம் ” காந்தியடிகள் ஆழ்ந்த சிந்தனையிலிருக்கிறார். ஏதோ மிக முக்கியமான முடிவு ஒன்று எடுப்பார்போல் தோன்றுகிறது.” என்றார்.

மறுதினமே காந்தியடிகள் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக இருபத்தோரு நாட்கள் உண்ணாவிரத்த்தை மேற்கொள்வதாக அறிக்கை வெளியிட்டார்.

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (4-Nov-15, 4:22 pm)
பார்வை : 153

மேலே