உடலுழைப்பின் ஐந்தொகை

அகத் தழுக்கு நீக்கவே
முகத்தழகு கூடுமே
அசுத்த மாவுப் பூச்சுகள்
அழுக்கு தனைக் கூட்டுமே

இளமையோடு நீடுவாழ
எத்தனையோ பயிற்சிகள்
இன்பமென்ற சோம்பலினால்
எடுக்கவில்லை முயற்சிகள்

உழைக்கவுமே விளைக்கவுமே
போதும் உயிர் வாழவே
விளம்பரங்கள் ஏய்ப்பதெல்லாம்
வீசவேண்டும் தெருவிலே

விளம்பரத்தால் பலத்த லாபம்
வியாபாரி நோட்டிலே
வேட்டி மடித்த நுகர்வாளன்
வேடிக்கை ரோட்டிலே

உடலுழைப்பின் லாபநட்டம்
எழுதிப் பாரு ஏட்டிலே
உத்தமராய் யாருமோங்க
ஒளி பெருகும் நாட்டிலே

... மீ.மணிகண்டன்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (5-Nov-15, 1:29 pm)
சேர்த்தது : மீ மணிகண்டன்
பார்வை : 70

மேலே