கவிதைக்கான இலக்கணம்

ஒரு கவிதைக்கான இலக்கணம் எது என்று என்னைக்கேட்டால் என் பதில்,
உலகில் எத்தனைவிதமான மனிதர்கள் இருக்கிறார்களோ, அத்தனை விதமான இலக்கணம் இருக்கிறது என்பதாகவே இருக்கும்.

மரபுக்கவிதைகளின் ஆதாரமான ஓசைநயமும் தாளக்கட்டும் எல்லோரையும் மயக்கக்கூடியவை என்பதில் ஐயமில்லை. இருந்தும் வசனகவிதை எனும் புதுக்கவிதை உருவானதன் காரணம் என்னவாக இருக்கும் ?

மரபிலுள்ள சில விதிகளை உடைத்தெறியும் மொழியின் இயல்பான ஆவல்தானே ? குறிப்பிட்ட ஒரு வடிவத்தை உடைத்துவிட்டு வெளியேறிய புதுக்கவிதைக்கும் விதிமுறைகள் வகுப்பது என்னமாதிரியான நியாயம் ?

இதுதான் கவிதையென்று எதைவைத்துத் தீர்மானிக்கின்றோம் ? அதைத்தீர்மானிக்கும் அத்தாரிட்டி யாரிடம் இருக்கிறது ? வாசிக்கும் எல்லோருக்குமே அந்த அத்தாரிட்டி இருக்கிறதென்றுதான் தோன்றுகிறது. எழுதப்படும் எல்லாமே கவிதை என்று ஒப்புக்கொண்டுவிடமுடியாத யதார்த்தத்தில், இதுதான் கவிதையென்று உரத்துச்சொல்வதற்கான ஆதார விதிமுறைதான் என்ன ?

புதுக்கவிதைக்கும் வரையறைகள் இருக்கின்றனவா ? இருப்பின் அதை உருவாக்கியவர் யார் ? ஒரு கவிதைக்கு வரையறை தேவைதானா எனும் கேள்விகள் கடந்து, கவிதை என்பதே வாழ்விற்குத் தேவைதானா என்றும் கேள்வி எழுகிறது.....

சிந்தனை உதவி திரு ராகவேந்திரன் லக்ஷ்மணன்

எழுதியவர் : செல்வமணி - இணையம் - மாதவன் ஸ (6-Nov-15, 8:02 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 234

சிறந்த கட்டுரைகள்

மேலே