நிலாச்சோறு

நிலாச்சோறு ஊட்டிய பொழுதில்
உன் கை விரல்களில் ஒட்டிய உணவு
இன்னமும் மணக்கின்றது…

உணவுத்தட்டில் ஒரு வாய் உணவு மீதமிருக்க
என் நிலவு யாத்திரையின் கனவு
உன் மடியினில் கலைகிறது…

மிஞ்சிய உணவுக்கு பாதை வகுத்து
பங்கு பிரிப்பாய்
அப்பவுகொரு பங்கு
அம்மாவுக்கொரு பங்கு
அண்ணனுக்கு ஒரு பங்கு
அக்காவுக்கு ஒரு பங்கென்று
எனக்கென்று ஒரு பங்கும் வைக்காது
முழுப்பங்கையும் எனக்கூட்ட
ஆனந்தத்தில் பூப்பேன்
பூத்த பொழுததை நினைக்கையில்
நெஞ்சம் இன்றுவரையில் நனைகிறது..

இரண்டு வயதென்றாலும்
இருபது வயதென்றாலும்
உன்னை அம்மா என்று கூப்பிடும் பொழுது
நான் என்றுமே குழந்தைதான்…

என் ஜனனம் உன் மடியில் ஆரம்பித்தது
என் மரணம் உன் மடியில் முடியமுன்
என்னை விட்டுச்சென்றாய் ஏங்குகிறேன்...

எதுவுமிருந்தும் நீ இன்றி
நான் எதுவுமே இல்லாதவன்தான்..

... பர்ஷான்...

எழுதியவர் : பர்ஷான் (8-Nov-15, 2:49 pm)
சேர்த்தது : பர்ஷான்
பார்வை : 314

மேலே