கூட்டிட்டு போய்டு

டாக்டர் : என்னங்க உடம்புக்கு...

நோயாளி : கண்ணு சரியா தெரியல டாக்டர் .

டாக்டர் : தூர பார்வையா கிட்ட பார்வையா

நோயாளி : தூர பார்வை டாக்டர் ...

டாக்டர் : சரி இந்த பலகைல இருக்குற சின்ன எழுத்த தெரியுதா ....

நோயாளி : தெரியல டாக்டர்

டாக்டர் : என்னங்க இது தெரியலையா ...

நோயாளி : தெரியல டாக்டர்

டாக்டர் : நான் முதல்ல உங்க கண்ணா செக் பண்ற அப்புறம் பாக்கலாம்..

நோயாளி : சரி டாக்டர்

டாக்டர் : உங்க கண்ணா செக் பண்ணதுல உங்களுக்கு ஒரு ஆபரேஷன் பண்ணனும் அப்படி பண்ணா கண்ணு சரியாகும் ...

நோயாளி: எவ்வளவு செலவாகும் டாக்டர்

டாக்டர் : ஒரு 30 லட்சம் ஆகும் ...

நோயாளி : கேக்கல டாக்டர்

டாக்டர் : 30 லட்சம் ஆகும்னு சொன்னே

நோயாளி : இதுக்கு காது கேக்காமலே இருந்திருக்கலாம்...

டாக்டர் : என்னய்யா 30 லட்சம் முக்கியமா இல்ல உன்னோட கண்ணு முக்கியமா

நோயாளி : இப்பதான் டாக்டர் இந்த கண்ணா வச்சி 5 லட்சம் சேத்திருக்கே இத எடுத்துட்டா அப்புறம் என்ன பண்றது

டாக்டர் : என்னது கண்ணை வச்சி 5லட்சம் சம்பாதிச்சியா

நோயாளி : ஆமா டாக்டர் கண்ணு தெரியலனுன்னு 10 வருஷமா பிச்சஎடுத்துகிட்டு இருந்தேன்

டாக்டர் : பிச்ச காரனா நீ !!!

நோயாளி : ஆமாம் டாக்டர்

டாக்டர் : அப்புறம் ஏண்டா எங்கிட்ட வந்த

நோயாளி : எல்லார் கிட்டயும் கண்ணை காட்டிட்டேன் அவங்க எல்லாம் 5 ரூபா 10 ரூபா தான் போட்டாங்க அதுல ஒருத்தர் டாக்டர் கிட்ட காட்ட சொன்னாரு சரி உங்ககிட்ட காட்டினா அதிகமா போடுவீங்கன்னு உள்ள வந்தேன் நீங்க என்னடான்னா 30 லட்சம் எங்கிட்ட கேக்குறீங்க ..

டாக்டர் : நான் வேணும்னா ஒரு 30 ஊசி இலவசமா போடட்டுமா உன்ன யாருயா உள்ள விட்டது ..

நோயாளி : ஐய்யா கண்ணு தெரியலன்னு சொன்னே உங்க ஆளுதா உள்ள உக்காரு டாக்டர் வருவாருன்னு சொன்னாரு ...

டாக்டர் : patient வந்தா உள்ள உக்கார வைக்க சொன்னே அவன் பிச்சக்காரன உக்கார வெச்சிருக்கா...

நோயாளி : அவருக்கு காதுகேக்கலன்னு நினைக்கிறேன் டாக்டர்

டாக்டர் : ஒன்னு செய் அவனையும் உன்கூட கூட்டிட்டு போய்டு ...

எழுதியவர் : சாமுவேல் (8-Nov-15, 3:24 pm)
சேர்த்தது : சாமுவேல்
பார்வை : 93

மேலே