டாக்டர் 11

நபர் : "டாக்டர்! நாளுக்கு நாள் உடம்பு குண்டாகிக் கொண்டே போகுது!..இதுக்கு நல்ல ஒரு வைத்தியம் சொல்லுங்களேன்"!

டாக்டர் : 'ம்ம்....பொதுவா நம்முடைய சாப்பாட்டு முறையில சரிவிகிதம் இல்லாததனாலே,இந்த மாதிரியெல்லாம் ஆகுது...நான் சொல்றா மாதிரி சாப்பாட்டு முறைய கடைப்பிடிச்சீங்கன்னா எல்லாம் சரியாயிடும்"!

நபர் : "ம்.சொல்லுங்க டாக்டர்".

டாக்டர் : "காலையில 3 இட்லி,மத்தியானம் கொஞ்சமா சோறு, இரவுல 2 சப்பாத்தி.இந்த மாதிரி சாப்பிட்டு பாருங்க... ஒரே மாசத்தில உங்களுக்கு நல்ல ரிசல்ட் தெரியும்".

நபர் : "ரொம்ப நன்றி,டாக்டர்...!நீங்க சொன்ன மாதிரியே செய்றேன்".

(கொஞ்ச தூரம் சென்ற அந்த நபர் , திரும்பி வந்து..)

நபர் : "டாக்டர்! ஒரு சின்ன சந்தேகம்"...!

டாக்டர் : "சொல்லுங்க"...

நபர் : "நீங்க சொன்ன இதையெல்லாம் சாப்பாட்டுக்கு
முன்னாடி சாப்பிடனுமா?... இல்லன்னா சாப்பாட்டுக்கு பின்னாடி சாப்பிடனுமா"?..

டாக்டர் : !!!!!!!!!!

எழுதியவர் : செல்வமணி (8-Nov-15, 6:49 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 92

மேலே